Tuesday, December 28, 2010

சேவையின் தொடக்கம்



மக்களிடம் போ,

அவர்களுடன் வசி,

அவர்களிடம் கற்றுக் கொள்,

அவர்களை நேசி,

அவர்களுக்குப் பணி செய்,

அவர்களுடன் சேர்ந்து திட்டமிடு,

அவர்களுக்கு என்ன தெரியுமோ

அதிலிருந்து தொடங்கு,

அவர்களிடம் என்ன இருக்கிறதோ

அதை வைத்து எழுப்பு!

அண்மையில் வாசிக்கக் கிட்டிய ‘அறிவுக்கு ஆயிரம் வாசல்’ என்ற ரா.கி.ரங்கராஜன் அவர்களுடய புத்தகம் ஒன்றிலிருந்து;

மேலதிக குறிப்பு; அவ் வாசகம் பிலிப்பைன்ஸ் நாட்டு கிராமமொன்றின் சுவரொட்டியில் காணப்பட்ட வாசகம் என்ற குறிப்புக் அப்புத்தகத்தில் காணப் படுகிறது.

எல்லோருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Tuesday, November 30, 2010

முகம்


கடவுள் உனக்கு ஒரு முகத்தைத் தான் தந்திருக்கிறார். மற்றொன்றை நீ தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். - ஷேக்ஸ்பியர் -

Sunday, November 7, 2010

கவனம்!


சிறிய பாம்பென்றாலும் பெரிய தடியால் அடி!

Thursday, September 30, 2010

ஒளிமேவும் அழகு!


"ஆசைகள் இல்லாத சித்தம்
அதிலொன்றும் காயங்கள் நேராது
மாசேதும் இல்லாத புத்தி
மற்றோரைக் காயப் படுத்தாது
நேசத்திலே நெய்த நெஞ்சம்
நீதிக்கு மேலேதும் அறியாது
ஓசைகள் தீர்ந்திடும் மாலையில்
ஒளி மேவும் அழகுக்கு நிகரேது?"


'ஓசைகள் தீர்ந்திடும் மாலையில் ஒளிமேவும் அழகு' எனக் கவிஞர் குறிப்பிடுவது உலகத்தின் சலசலப்புகள் எல்லாம் அடங்கி முகமூடிகளைக் களட்டி வைத்து விட்டு நம்மை நாம் தரிசிக்கின்ற வேளையில் கண்முளித்துக் கேள்வி கேட்கத் தொடங்கும் மனசாட்சியின் மகிழ்ச்சியும் திருப்தியும் கொண்ட,பொலிவும் நின்மதியும் கொண்ட நிறைவு முகம் என்றே நான் அதனை மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறேன்.

உன்னதமான மகிழ்ச்சியின் மூல ஊற்று அங்கு தான் நிலை கொண்டிருக்கின்றது என்பது என் எண்ணம்.'உள் அழகு.'

உங்களுக்கு வேறேதும் தோன்றுகின்றதா?

இந்த அழகிய கவிதா வண்ணத்தை கவிஞர் ரமணன் என்பவர் இயற்றி இருக்கின்றார். 'எந்த வானமும் உயரமில்லை' என்ற கவிதைத் தொகுப்பில் இது வெளியாகியிருகின்றது என்ற குறிப்புடன் அதனைத் தந்திருக்கின்றது நிலாச்சாரல் என்ற மின் இதழ்.

நன்றி; நிலாச்சாரல்.

Thursday, September 2, 2010

ஒரு திரைக் காட்சி

மகா கவி காளிதாஸ் என்ற 1955ம் ஆண்டு வெளிவந்த திரைப் படத்திலிருந்து ஒரு காட்சி;கதை வசனம் கே. வி. மகா தேவன்.

இளவரசியைத் திருமணம் செய்ய ஒரு போட்டி நடக்கிறது. அது அறிவுப் போட்டி. அறிவால் மகளை வெல்பவருக்கே தன் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கப் போவதாக அரசன் அறிவித்து விட்டான்.

அரசு,ஆட்சி, செல்வம் இவை அனைத்தும் நிலையற்றவை.அறிவும் கல்வியும் தான் நிலையானவை என்பதை அறிந்தவன் அரசன்.அதனால்,கல்வியறிவும் கலையுணர்வும் கொண்ட மணாளனுக்கான போட்டி நடை பெறுகிறது.வினாக்களும் விடைகளும் கீழே!




1.கல்வி எது? அறிவு எது? இவ் இரண்டில் சிறந்தது எது?
கற்பது மட்டுமே கல்வி.கற்றதனாலும் மற்றதினாலும் அறிவது அறிவு.ஆகையினால் கல்வியிலும் அறிவே சாலச் சிறந்தது.

2.வாழ்வோருக்குத் துணை எது?
நம்பிக்கை.

3.வழி நடப்போர்க்குத் துணை?
தைரியம்.

4.அழியாப் புகழ் பெறுவது?
தியாகம்.

5.அன்றாடம் தண்டிப்பது?
மனசாட்சி.

6.மனிதரை உயிரோடு தின்பது?
கவலை.

7.உலகின் மிகப் பெரும் அதிசயம்?
உலகில் தினம் சாகும் மனிதர்களைப் பார்த்துக் கொண்டும் தனக்கென்று பொருள் சேர்க்கும் மனித குணம்.

8.இன்ப துன்பங்களை அனுபவிப்பது உயிரா? உடலா?
உடலையும் உயிரையும் பிணைத்து நிற்கும் உணர்வு.

9.அழியும் உடலுக்கு இன்னல் நேரும் போது அழிவற்ற ஆண்மாவும் அல்லல் படுவது ஏன்?
கூட்டைச் சிதைக்கும் போது குருவியும் கதறுவதைப் போலத்தான்.

10.உயிர்கள் எங்கிருந்து வருகின்றன? எங்கு போய் முடிகின்றன?
பராமாத்மாவிடமிருந்தே உயிர்கள் பிரிந்து வருகின்றன.மீண்டும் பரமாத்மாவிடமே போய் இணைகின்றன.

11.அப்படியானால் உயிர்கள் இடத்திலே குண வேற்றுமைகள் இருப்பது ஏன்?
ஒரே கடலின் நீரானாலும் கொதிக்கின்ற பாத்திரத்திலே வைத்த நீர் கொதிக்கும். குளிர்ந்த பாண்டத்திலே வைத்த நீர் குளிர்ந்திருக்கும்.அவ்வாறே அந்தந்த ஆத்மாக்களின் உடலங்களுக்கேற்பவே குண பேதங்களும் அமையும்.

12.உயிர்களுக்கு முன் பிறவி இருந்ததை உணர்த்த ஏதேனும் ஆதாரம் காட்ட முடியுமா?
உலகிலே புதிதாகப் பிறக்கும் உயிர், பசியை உணர்ந்து அழுகிறது.பால் அருந்தினால் பசி தீரும் என்பதையும் அறிந்திருக்கிறது.இதனால் பால் உண்ணத் தாயைத் தேடித் தானாக நகர்கிறது.இவை எல்லாம் அந்தப் புத்தம் புது உயிருக்கு இந்த உலகத்திடம் முன் அனுபவம் இருந்ததற்கு ஆதாரம் என்று கூறலாம் அல்லவா?

நன்றி; 'மகாகவி காளிதாஸ்' திரைப்படம்.

Wednesday, August 11, 2010

கடிவாளம் நம் கையில்


மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்கிறீர்கள்.

Tuesday, July 20, 2010

இப்படியும் பார்க்கலாம்


எங்கு யாரிடம் எந்தத் தவறைக் கண்டாலும் அதை உங்களிடம் திருத்திக் கொள்ளுங்கள்.

நாம் பேசுவதிலும் செய்வதிலும் பெரும்பாண்மையானவை அவசியமற்றவை.அவற்றை விலக்கி விட்டால் அதிக நேரமும் கூடுதலான மன அமைதியும் கிட்டும்.

மற்றவர்களுடைய தவறுகளைப் பற்றிய எண்ணங்களை நீ சுமந்து கொண்டு திரியாதே! அதை அவர்களிடமே விட்டு விடு.

மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள்,நினைக்கிறார்கள்,செய்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்துவதை நிறுத்தும் போது தான் பேரமைதி கிடைக்கிறது.நீ என்ன செய்கிறாய் என்பது மட்டுமே முக்கியம்.

செய்தவரைப் பார்க்காது அவரது செயலை மட்டுமே சீர் தூக்கிப் பார்.

புற விடயங்கள் பிரச்சினையல்ல.அவற்றைப் பற்றிய நமது மதிப்பீடுகளே பிரச்சினை.

அதிர்ப்திக்கெல்லாம் காரணம் சுயநலமே!

இது நல்லது;இது கெட்டது என்று அவசர தீர்ப்பு வழங்க மனதை அனுமதியாதே!

Saturday, July 17, 2010

சில துளிகள்



*வெற்றி தலைக்கும் தோல்வி இதயத்திற்கும் செல்லாது பார்த்துக் கொள்ளுங்கள்.

*மனிதன் பிறந்தது வெற்றியடையவே; தோல்விக்கான காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்கவல்ல.

*துரதிஷ்டத்தின் போது துணிவுடன் இருங்கள்.நல்லதிஷ்டத்தின் போது பணிவுடன் இருங்கள்.

*ஒருவன் உயரும் போது உலகம் அவனைப் பார்க்கிறது.வீழ்ச்சியடையும் போது தான் அவன் உலகத்தைப் பார்க்கிறான்.

*நான் சோம்பேறி என்பதைத் தான் சிலர் நாசுக்காக எனக்கு நேரமே கிடைக்கவில்லை என்கிறார்கள்.

*ஒன்றைச் செய்ய விரும்பினால் வழியைக் கண்டுபிடிக்கிறாய்.செய்யாமல் இருக்க விரும்பினால் காரணங்களைக் கண்டுபிடிக்கிறாய்.

*திறமை ஒருவனை மேலே கொண்டு போகும்.நல்ல குணம் தான் அவனைக் கீழே விழாமல் பாதுகாக்கும்.

நன்றி;பரிசு சிறுவர் பத்திரிகை;மே 09 - 23,2010 மற்றும் ஜூன் 13 - 27,2010

Wednesday, June 16, 2010

தர்க்கத்திற்கு அப்பால்.....


சிறுகதை
எழுத்தாளர்; ஜெயக்காந்தன்.


வெற்றி என்ற வார்த்தைக்குப் பொருளில்லை.நினைத்தது நடந்தால் வெற்றி என்று நினைத்துக் கொள்கிறோம்.தோல்வி நிச்சயம் என்று எண்ணித் தோற்றால் அந்தத் தோல்வியே வெற்றி தான்.ஒரு காலத்தில் எனக்கு இப்படிப்பட்ட'வெற்றி'கள் வாழ்க்கையில் நிறையவே சம்பவித்தன.

என் வாழ்வையே நிர்ணயிக்கும் ஒரு முக்கிய காரியமாய் பக்கத்து நகரத்துக்குப் போயிருந்தேன்.வழக்கம் போல'தோல்வி நிச்சயம்'என்ற மனப்பாண்மையுடன் போன நான், வழக்கத்துக்கு மாறாக அன்று தோற்றுப் போனேன்.தோல்வி நிச்சயம் என்ற என் மனப் போக்கு தோற்றது.என் வாழ்க்கையே நிர்ணயிக்கப் பட்டு விட்டது.

கற்பனைக்கு எட்டாத ஒரு பேரழகியை ரகசியமாய் மனசிற்குள் காதலித்து, அந்தக் காதலை அவளிடம் வெளியிடும் என் எண்ணத்தை நானே பரிகசித்து, பின்னர் ஒரு அசட்டுத் துணிவில், அவளது பரிகசிப்பையும் ஏச்சையும் எதிர்பார்த்துத் தயங்கி, நாணிக் கூசி அவள் சந்நிதியில் நின்று 'உன்னை நான் காதலிக்கிறேன்'என்று முற்றிலும் கூறி முடிக்கு முன்பாக, அந்த வானத்துக் கனவு எனது வார்த்தையை எதிர் பார்த்துப் பல காலம் தவம் கிடந்தவளே போன்று ஆயிரம் முத்தங்களை எதிர் நோக்கிச் சிவந்த அதரங்கள் துடிதுடிக்க என் கரங்களிடையே விழுந்ததற்கொப்பான தோல்வி அது.

இந்த தோல்வியை அல்லது வெற்றியைக் கொண்டாடித் தீர வேண்டும்.ஊருக்குத் திரும்பிய பின் தானே?அல்ல; இப்போதே!நான் ரொம்ப அவசரக் காரன்.

கொண்டாடுவது என்பது பெரிய காரியமா? அது கொள்ளப் பட்ட உள்ளம் தன்னுள் லயித்துக் குதூகலிப்பது.அதன் விளைவாய் ஏற்படும் புற நிகழ்ச்சிகள் பெரிய காரியம் அன்று.கொண்டாட்டத்தைச் சிலர் வானத்தை வண்ணப் படுத்தும் வேடிக்கை நிகழ்த்திக் கொண்டாடுவார்கள்.சிலர் நாலு பேருக்கு வயிறார உணவளித்துக் கொண்டாடுவார்கள்.இன்னும் சிலர் அந்தப் பொழுதிலாவது தன் வயிறார உண்டு மகிழ்வார்கள்.அதெல்லாம் அப்போதிருக்கும் அவரவர் சக்தியைப் பொறுத்தது.எனினும்,மனசில் ஏற்படும் அனுபவம் அனைவர்க்கும் ஒன்று தான்.

இப்பொழுது என் நிலைமை பையிலிருக்கும் ஒரு வெள்ளி ரூபாய் நாணயம் தான்.அதெற்கென்ன?இந்த ஒரு ரூபாயிலும் கொண்டாடலாமே! அது தான் முடியாது.ஊருக்குப் போக முக்கால் ரூபாய் வேண்டும்.அதனால் தான் என்ன?கால் ரூபாயில் கொண்டாட முடியாதா?நிச்சயம் முடியும்.

சங்கரய்யர் ஹொட்டலில் புதுப்பால் புது டிகாக்ஷன், சர்க்கரை கம்மி, ஸ்டாங்கா ஒரு கப் காப்பி இரண்டணா தான்.காப்பி அருந்தியதும் உடம்பில் ஒரு தெம்பும் மனசில் ஒரு தனிக் குதூகலமும் பிறந்தன.ஊர் திரும்ப ஒதுக்கி வைத்த பன்னிரண்டணா போக கையில் இருக்கும் இரண்டணாவை என்ன செய்யலாம்? 'கடசிச் சல்லியையும் ஒரு ராஜாவைப் போல செலவு செய்'என்ற பழ மொழி நினைவுக்கு வந்தது.

'ஐயா,தர்ம துரை-கண்ணில்லாத கபோதி ஐயா...!' என்ற குரல்.ஸ்டேசனுக்குள் நுழையுமிடத்தில். ஓர் ஓரமாய் அந்தக் குருட்டுப் பிச்சைக் காரன் உட்கார்ந்திருந்தான்.கிழவன்.அவன் எதிரே இருந்த அலுமீனியப் பாத்திரத்தில் வெறும் செப்புக் காசுகளே கிடந்தன.அவற்றின் நடுவே நான் போட்ட இரண்டணா வெள்ளை வெளேர் என இருந்தது அழகாய் தானிருந்தது.குருடன் அதை எடுத்துத் தடவிப் பார்த்தவாறே, நான் இருப்பதாக அவன் நினைத்த திசை நோக்கிக் கரம் குவித்து, 'சாமி, நீங்க போற வழிக்கெல்லாம் புண்ணியமுண்டு'என்று வாழ்த்தினான்.அதன் பிறகு உண்மையிலேயே நாலணாவில் அந்த நல்ல நாளைக் கொண்டாடி விட்ட நிறைவு பிறந்தது எனக்கு.

புக்கிங் கவுண்டரின் அருகே போய் என் சொந்தக் கிராமத்தின் பெயரைச் சொல்லிச் சில்லறையை நீட்டினேன்.டிக்கட்டை எதிர்பார்த்து நீண்டிருந்த என் கைக்குள் மீண்டும் சில்லறையே விழுந்தது.

'இன்னும் ஓரணா கொடுங்க சார்'

'பன்னிரண்டணா தானே?'

'அது நேற்றோடு சரி.இன்றிலிருந்து அதிகம்.'

என் கை சில்லறையோடு வெளியே வந்தது.திடீரென்று பாதாளத்தில் விழுந்து விட்டதைப் போன்ற திகைப்பில் நின்று விட்டேன்.'யாரிடம் போய் ஓரணா கேட்பது?'

அதோ ஒரு பெரியவர் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறாரே, அவரிடம்...' என்று நினைக்கும் போதே 'ஓரணா தானே கேட்டால் தான் என்ன'என்று நினைக்கும் போதே ,கேட்டால் என்ன நடக்கும் என்பது தெளிவாகிக் கொண்டிருந்தது.அங்கே யாரோ ஒருவன் அவரருகே சென்றான்.அவன் என்ன கேட்டானோ....? அவர் சொன்ன பதில் உலகத்துக்கே கேட்டது.எனக்கும் உறைத்தது.இரண்டணா தர்மம் செய்து ஐந்து நிமிஷம் ஆகவில்லை.. ஓரணாவுக்கு யாசிப்பதா என்று யோசிக்கும் நிலை வந்து விட்டதை எண்ணும் போது மனம் என்னமாய் வாழ்க்கையோடு தர்க்கம் புரிகிறது?

'அதோ அந்தக் குருடனின் பாத்திரத்தில் செப்புக் காசுகளின் நடுவே ஒளி விட்டுச் சிரிக்கிறதே இரண்டணா அது என்னுடையது.'

அது எப்படி உன்னுடையதாகும்? நீ கொடுத்துவிட்டாய் அவன் வாழ்த்தி விட்டான்.

இப்ப சந்தியில் நிற்கிறேனே?அதில் ஓரணா கூடவா எனக்குச் சொந்தமில்லை? அவன் பாத்திரத்தில் கிடந்தாலும் அது என்னுடையது அல்லவா? கேட்டால் தருவானா? தர மாட்டான்.அவனுக்கு எப்படித் தெரியும் அதைப் போட்டவன் நான் என்று?

எடுத்துக் கொண்டால்...? அதோ ஒராள் ஓரணா போட்டு விட்டு அரையணா எடுக்கிறானே!அது போல ஓரணாவைப் போட்டு விட்டு என்னுடைய ரண்டணாவை எடுத்துக் கொண்டால்...?

இது திருட்டல்லவா?

திருட்டா? எப்படியும் என் பக்கத்திலிருந்து தர்மமாக ஓரணா கிடைக்குமே! அந்த ஓரணா புண்ணியம் போதும்.என் காசை நான் எடுத்துக் கொள்கிறேன் என்று பொருளாதார ரீதியாகக் கணக்கிட்டுத் தர்க்கம் பண்ணிய போதிலும் திருடனைப் போல கை நடுங்குகிறது.ஓரனாவைப் போட்டேன்.இரண்டணாவை எடுத்துக் கொண்டு திரும்பினேன்.

அடப்பாவி - திரும்பிப் பார்த்தேன்.குருட்டு விழிகள் என்னை வெறிக்க வாழ்த்தத் திறந்த வாயால் சபிப்பது போல் கேட்டான்.

'சாமி இது தானுங்களா தர்மம்? யாரோ ஒரு புண்ணியவான் இரண்டணா போட்டாரு.அதை எடுத்துக்கிட்டு ஓரணா போடறியே?குருடனை ஏமாத்தாதே.நரகத்துக்குத் தான் போவே'

நெருப்புக் கட்டியைக் கையிலெடுத்தது போல் அந்த இரண்டணாவை அலுமீனியத் தட்டில் உதறினேன்.இப்பொழுது என் கணக்கில் மூன்றணா தர்மம்.

'தெரியாமல் எடுத்துட்டேன்.'என்று சொல்லும் போது என் குரலில் திருட்டுத்தனம் நடுங்கியது.

ஒரு பெண் அரையணா போட்டு விட்டு காலணா எடுத்துச் சென்றாள்.குருடன் உடனே இரண்டணா இருக்கிறதா என்று தடவிப் பார்த்தான்.அப்படிப் பார்த்த போது அது இல்லாதிருந்து தான் நான் சிக்கிக் கொண்டேன் என்று புரிந்தது.அது அவனுக்குக் கிடைக்காமல் கிடைத்த செல்வம்.விட மனம் வருமா?

நான் யோசித்தேன்.

அது அவன் பணமா?

ஆமாம்.

நான் தானே தந்தேன்.

காசைத்தான் கடன் தரலாம்.தர்மத்தைத் தர முடியுமா? தர்மத்தை யாசித்துத் தந்தால் தான் பெற வேண்டும்.

வெகு நேரம் நின்றிருந்தேன்.நான் போக வேண்டிய ரயில் வந்து போய் விட்டது.அடுத்த வண்டிக்கு இன்னும் நேரமிருக்கிறது.தருமத்தின் பலனை அடுத்த ஸ்ரேசன் வரை கால் வலிக்க நடந்து அனுபவித்தேன்.

சில வருஷங்களுக்கு முன் தமிழ் நாட்டில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்.அது, அன்று நான் போக இருந்து தவற விட்ட ரயில் தான்.

அந்த விபத்தில் இருந்து நான் எப்படித் தப்பினேன்?தருமம் காத்ததா?

எனக்குத் தெரியாது.இதெல்லாம் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டது.



எழுத்து உருவாக்கம்: எழுத்தாளர் ஜெயக்காந்தன்.

நன்றி ஆனந்த விகடன்.
05.11.1961.
மறு பிரசுரம் ஆனந்தவிகடன்.
4.11.09.பக்:75.

(தமிழ்முரசுஅவுஸ்திரேலியாவுக்காகப் 16.06.2010பதிவு செய்யப் பட்டது)

Wednesday, June 2, 2010

மகா பாரதத்தில் ஒரு துளி


சுக்கிராச்சாரியார் அரச குரு. அவரது மகள் தேவயாணியும் அரசன் மகள் சர்மிஷ்டையும் வனத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட வாக்கு வாதம் ஒன்றில் இளவரசி தேவயாணியைப் பார்த்து 'நீ என் தந்தையிடம் கையேந்திப் பிழைக்கும் யாசகனுடைய மகள்' என்று கூறிவிட்டாள்.அது அரச குருவின் மகளுக்கு மிகுந்த ரோசத்தை கொடுத்து விட்டது.

அவள் வீடு செல்ல மனமின்றி மரத்தடியில் தங்கி விட்டாள். மகள் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்த சுக்கிராச்சாரியார் மகளின் நிலையறிந்து மிகத் துக்கப் பட்டு அவ்விடம் வந்து சேர்ந்தார்.அவளைப் பாசம் மீதுர அணைத்துக் கொண்டு,

"துக்கமும் சந்தோசமும் வெளி நிகழ்ச்சிகளில் இல்லை.நீ யார் பேரிலும் கோபிக்காதே.பிறருடைய குண தோசம் நமக்கு ஒரு தீங்கும் இழைக்க முடியாது" என்று சொன்னார்.

இவ்வாறு, மகாபாரதம் நிறைய வாழ்வின் சூட்சுமங்கள் புத்தகத்தின் பக்கங்கள் முழுக்கச் சிந்துண்டு கிடக்கின்றன.

மகாபாரதம்; ராஜாஜி;பக்;26;வானதி பதிப்பகம்.

Sunday, May 9, 2010

கர்ப்போபநிடதம்


உபநிடதங்கள் வேதங்களுக்குப் பிற்பட்டவை.வேதங்களின் சாரம் அது.இந்து சமய தத்துவங்களின் மூலம் அவையே.அதில் இடம் பெற்றிருக்கிற ஆத்மா உடலைப் பெறும் நுணுக்கம் பற்றிய செய்தி ஆச்சரியத்தைத் தருவதாக இருந்தது.


ஆத்மா உடலைப் பெறும் நுட்பம் பற்றிக் கர்ப்போபநிடதம்.


எப்போது ஒரு மனிதனுக்கு விஷய போகத்துக்குரிய திரவியங்கள் உண்டாகின்றனவோ அப்போது அவற்றின் கூட்டுறவின் நல்ல குணத்தால் ஆறு விதமான ரசங்கள் தோன்றுகின்றன.ரசத்தில் இருந்து ரத்தம்,ரத்தத்தில் இருந்து மாமிசம்,மாமிசத்தில் இருந்து கொழுப்பு,கொழுப்பில் இருந்து நரம்புகள்,நரம்புகளில் இருந்து எலும்புகள் எலும்புகளில் இருந்து ஊன்,ஊனில் இருந்து சுக்கிலம் - இப்படி ஏழு தாதுக்களால் ஆனது சரீரம்.

சுக்கிலமும் சோணிதமும் சேர்வதால் கர்ப்பம் உண்டாகிறது.அதனை இயக்குமிடம் இருதயம்.இதயத்தினுள் ஒரு அக்கினி உள்ளது.அதில் பித்தமும் பித்தத்திலிருந்து வாயுவும் தோன்றுகின்றன.அந்த வாயு மீண்டும் கிரமமாக இருதயத்தை அடைகிறது.இது மக்களை ஆழும் இறைவனுடைய நியதி.

ருதுகால சம்போகத்தால் ஓரிரவு கழிந்ததும் கருவானது கலங்குகிறது.ஏழு இரவுகளில் நீர்க்குமிழி போன்ற உருவத்தை அடைகிறது.அரை மாதத்தில் பிண்டமாகிறது.ஒரு மாதத்தில் அது கடினமாகிறது.இரண்டு மாதங்களில் தலை தோன்றுகின்றது.மூன்று மாதங்களில் பாதங்களின் பிரதேசம் தோன்றுகின்றது.நாலாவது மாதத்தில் மணிக்கட்டு, வயிறு, இடுப்பு முதலிய பிரதேசங்கள் உண்டாகின்றன.ஐந்தாவது மாதத்தில் பின் புறம்(மூங்கில் போன்ற முதுகு),எலும்பு உண்டாகிறது.ஆறாவது மாதத்தில் வாய், மூக்கு, கண்கள், காதுகள் உண்டாகின்றன.ஏழாவது மாதத்தில் ஜீவனுடன் கூடுகிறது.எட்டாவது மாதத்தில் எல்லா லட்சணங்களும் பூர்த்தியாகின்றன.

தந்தையின் வீரியம் அதிகமாயிருந்தால் புருஷனாகவும்; தாயின் வீரியம் மேம்பட்டிருந்தால் ஸ்திரியாகவும்; இரண்டும் சமமானால் அலியாகவும் ஆகிறது.மனக் கலக்கத்தால் குருடர்களாகவும் முடவர்களாகவும்,கூனர்களாகவும்,குள்ளர்களாகவும் பிறக்கிறார்கள்.ஒன்றுக்கொன்று வாயுவால் பீடிக்கப் பட்டு சுக்லம் இரண்டு பட்டால் இரட்டைப் பிள்ளைகள் பிறக்கிறார்கள்.

பஞ்ச பூத வடிவான சரீரம் சமர்த்தியமுடையதாகும் போது ஐந்து ஞானேந்திரியங்களும் புத்தியும், அதனால் கந்தம்,ரசம் முதலியவற்றை அறியும் திறனும் உண்டாகின்றன.அப்பொழுது அந்த ஜீவன் அழியாத அக்ஷரமாகிய ஓங்காரப் பொருளைச் சிந்திக்கிறான்.அந்த ஓரெழுத்தை உணர்ந்தும்(ஓம்- நான் ஒரு ஆத்மா) பஞ்சபூதங்கள்,மனம் புத்தி, சம்ஸ்காரம் என்ற எட்டுப் பிரகிருதிகளும் அவற்றின் பதினாறு விகாரங்களும் தேகத்தில் அதை உடைய தேகி ஆகிய ஜீவனுடையவை ஆகின்றன.

தாயார் உண்டதும் பருகியதும் தாயுடன் இணைந்த நாடிகளில் பரவி அதன் மூலம் குழந்தையின் பிராணன் திருப்தியடைகிறது.பிறகு ஒன்பதாவது மாதத்தில் எல்லா லக்ஷ்ஷணங்களும் ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் பரிபூரண நிலையை எய்துகின்றன.அப்போது அந்த ஜீவனுக்கு முந்திய பிறவியின் ஞாபகம் உதிக்கிறது.தான் செய்த புண்ணியச் செயல்களையும் பாவச் செயல்களையும் உணர்கிறது.

..........திரும்பத் திரும்ப பிறந்தும் இறந்துமாயிற்று.இனி நான் பாவத்தைப் போக்குவதும்;கருமப் பயனில் இருந்து விடுதலை அளிப்பதுமாகிய சாங்கிய (ஞான) யோகத்தை அப்பியாசிக்கப் போகிறேன்;சனாதன ப்ரம்மத்தைத் தியானிக்கப் போகிறேன் என்றிவ்வாறு எண்ணுகிறது.

பிறகு மாய உலகில் பிறந்ததும் இயந்திரத்தால் பீடிக்கப் பட்டவனைப் போல விஷ்னு மாயா வாயுவால் தொடப்பட்டு; நினைவிழந்து; பிற பிறப்பையோ புண்ணிய பாவச் செயல்களையோ எதையும் அறிவதில்லை.

இவ்வாறு பிப்பிலாத மகரிஷியால் கர்ப்போபநிஷத்தில் உபதேசிக்கப் பட்டிருக்கிறது.

(உபநிஷத்ஷாரம்; உரையாசிரியர்- அண்ணா - சிறி ராமகிருஷ்னமடம் வெளியீடு - 16.08.1989 பக்; 155 - 160,163)

Wednesday, April 14, 2010

மனசுக்கு உணவு



* தவறான அபிப்பிராயங்கள் பொய்யை விடப் பெரிய எதிரிகள்.

*பிறர் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று நினைக்கத் தொடங்கினால் அவர்கள் உங்களைப் பற்றி நினைக்காததை எல்லாம் நினைப்பதாக நீங்கள் நினைத்துக் கொள்வீர்கள்.

* மூடனுடன் விவாதம் செய்வது அறிவுடைமை அல்ல.அதனால் விவாதத்தின் பின் யார் மூடன் என்பது விளங்காமலே போய் விடும்.

* மற்றொருவனைப் பற்றி உன்னிடம் ஒருவன் வாயைத் திறந்தால் உன் செவியை அடைத்துக் கொள்.

* நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் நாம் வருந்த வேண்டியதில்லை.ஏனெனில், அது நமக்கு வேண்டாததாகக் கூட இருக்கலாம்.

* ஒருவரின் அவல நிலையைப் பார்த்துச் சிரிக்கும் போது நம் அறியாமையை உறுதிப் படுத்துகிறோம்.

* வீணான எண்ணங்கள் நச்சுக் கிருமிகள்.உள்ளே அனுமதித்து விட்டால் அழிப்பது சிரமம்.

* துயரங்களை எதிர் பார்ப்பவன் இரு முறை துயரம் அடைகிறான்.

நன்றி; பரிசு - சிறுவர் பத்திரிகை. ஏப்ரல் 2010

Sunday, March 21, 2010

வள்ளுவன் வழி



வள்ளுவம் தமிழனின் வாழ்க்கை முறை.தமிழனின் பண்பாடு.தமிழ் செல்வம்.சிறந்த வாழ்க்கை நூல். நல் வழிகாட்டி.

பண்பட்ட உள்ளம் கொண்டவர் பண்பாடு உடையவர் ஆவார்.உள்ளத்தினின்று வெளிப்படுவன அத்தகைய இயல்புகள்.சொல்லாலும் செயலாலும் அவை வெளிப்படும்.ஒருவரின் குணம் நடத்தைகள்,இயல்புகள், நம்பிக்கைகள்,மற்றவர்களோடு பழகும் முறை,வாழ்க்கையைப் பற்றிய அவரின் எண்ணம்,சிந்தனைகள், விழுமியங்கள் இவைகள் எல்லாம் உள்ளத்தினின்றும் எழும் இயல்புகள்.அவை பண்பாடாகும்.


அப்படியென்றால் தமிழனுடய பண்பாட்டு வாழ்க்கை முறை தான் என்ன? திருக்குறளை இயற்றிய வள்ளுவர் 1330 சொற்செறிவுள்ள 2 அடிப் பாடல்களில் அழகாக அதனைப் பாடியுள்ளார்.
அன்போடும் அறத்தோடும் வாழும் வாழ்வு நமது என்கிறது அந்தத் திருக்குறள் என்னும் தமிழ் மறை.

விருந்தினரை உபசரித்தல்,இனிய வார்த்தைகளைப் பேசுதல்,செய் நன்றி அறிதல்,நடுவு நிலைமையோடிருத்தல்,அடக்கம், ஒழுக்கம்,பொறுமை, வெகுளாமை,கொல்லாமை, பொறாமை கொள்ளாமை,மற்றவர்களை இகழாமை,மன ஒருமைப்பாடு,தர்மத்தின் வழி நிற்றல்,பிறர் பொருளுக்கு ஆசை கொள்ளாமை,தீயனவும் பயனற்றதுமான வார்த்தைகளைப் பேசாமை,ஈகை,வாழ்வின் நிலையாமையை உணர்தல், இரக்கம்,ஒப்புரவு,வாய்மை - இவைகள் வள்ளுவம் கூறும் அறங்களாகும்.

இவற்றை அன்போடு செய்தலே தமிழனின் பண்பாடாகும்.

அவை எக்காலத்துக்கும் எவ்வுயிர்க்கும் எப் பருவத்துக்கும் பொருந்திப் போவன.அப்படியென்றால் குறிப்பாக மாணாக்கர்களாகிய எமக்கு அவர் என்ன கூறுகிறார்?

'எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் - அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு'

என்று கூறுகிறார்.இதன் பொருள் என்னவென்றால்,எந்த ஒரு விடயம் பற்றியும் யார் யார் எவ்வாறு எடுத்துக் கூறினாலும் கூறியவர் யார் என்பது பற்றி யோசிக்காமல் கூறப்பட்ட விடயத்தில் இருக்கின்ற உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறிவதே உண்மையான அறிவு என்பதாகும்.

அதனால்,அறிவுத் தேட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணாக்கர்களாகிய நாம் வள்ளுவன் வழி நின்று அன்போடும் அறத்தோடும் மெய்ப்பொருள் கண்டு வாழ்வோம்.

"வெள்ளத்து அனைய, மலர் நீட்டம்;மாந்தர் தம்
உள்ளத்து அனையது, உயர்வு"


(மாணவர்களுக்காக 21.03.10 அன்று எழுதியது)

Monday, March 8, 2010

gaytri Mantra


Gayatri Mantra is one of the most revered Mantra in Hinduism. Here is the scientific meaning of this Mantra

scientific meaning of Gaytri Mantra


Gayatri mantra has been bestowed the greatest importance in Vedic dharma.This mantra has also been termed as Savitri and Ved-Mata, the mother of the Vedas.

"Om-bhur bhuvah swah
Tat savitur varenyam
Bhargo devasya dheemahi;
Dhiyo yo nah prachodayat. "

The literal meaning of the mantra: O God! You are Omnipresent, Omnipotent and Almighty. You are all Light. You are all Knowledge and Bliss. You are Destroyer of fear, You are Creator of this Universe, You are the Greatest of all. We bow and meditate upon Your light. You guide our intellect in the right direction. The mantra, however, has a great scientific importance too, which somehow got lost in the literary tradition. The modern astrophysics and astronomy tell us that our Galaxy called Milky Way or Akash-Ganga contains approximately 100,000 million of stars. Each star is like our sun having its own planet system. We know that the moon moves round the earth and the earth moves round the sun along with the moon. All planets round the sun. Each of the above bodies revolves round at its own axis as well. Our sun along with its family takes one round of the galactic center in 22.5 crore years. All galaxies including ours are moving away at a terrific velocity of 20,000 mile s per second.


And now the alternative scientific meaning of the mantra step by step:


(A) OM BHUR BHUVAH SWAH:


Bhur the earth, bhuvah the planets (solar family), swah the Galaxy. We observe that when an ordinary fan with a speed of 900 RPM (rotations Per minute) moves, it makes noise. Then, one can imagine, what great noise would be created when the galaxies move with a speed of 20,000 miles per second. This is what this portion of the mantra explains that the sound produced due to the fast-moving earth, planets and galaxies is Om. The sound was heard during meditation by Rishi Vishvamitra, who mentioned it to other colleagues. All of them, then unanimously decided to call this sound Om the name of God, because this sound is available in all the three periods of time, hence it is set (permanent). Therefore, it was the first ever revolutionary idea to identify formless God with a specific title (form) called upadhi. Until that time, everybody recognized God as formless and nobody was prepared to accept this new idea. In the Gita also, it is said, "Omiti ekaksharam brahma", meaning that the name of the Supreme is Om , which contains only one syllable (8/12). This sound Om heard during samadhi was called by all the seers nada-brahma a very great noise), but not a noise that is normally heard beyond a specific amplitude and limits of decibels suited to human hearing. Hence the rishis called this sound Udgith musical sound of the above, i.e., heaven. They also noticed that the infinite mass of galaxies moving with a velocity of 20,000 miles/second was generating a kinetic energy = 1/2 MV2 and this was balancing the total energy consumption of the cosmos. Hence they named it Pranavah, which means the body (vapu) or store house of energy (prana).



B. TAT SAVITUR VARENYAM:


Tat that (God), savitur the sun (star), varenyam worthy of bowing or respect. Once the form of a person along with the name is known to us, we may locate the specific person.Hence the two titles (upadhi) provide the solid ground to identify the formless God, Vishvamitra suggested. He told us that we could know (realize) the unknowable formless God through the known factors, viz., sound Om and light of suns (stars). A mathematician can solve an equation x2+y2=4; if x=2; then y can be known and so on. An engineer can measure the width of a river even by standing at the riverbank just by drawing a triangle. So was the scientific method suggested by Vishvamitra in the mantra in the next portion as under:-

C) BHARGO DEVASYA DHEEMAHI:

Bhargo the light, devasya of the deity, dheemahi we should meditate. The rishi instructs us to meditate upon the available form (light of suns) to discover the formless Creator (God). Also he wants us to do japa of the word Om (this is understood in the Mantra). This is how the sage wants us to proceed, but there is a great problem to realize it, as the human mind is so shaky and restless that without the grace of the Supreme (Brahma) it cannot be controlled. Hence Vishvamitra suggests the way to pray Him as under:

D) DHIYO YO NAH PRACHODAYAT:

Dhiyo (intellect), yo (who), nah (we all), prachodayat (guide to right Direction). O God! Deploy our intellect on the right path. Full scientific interpretation of the Mantra: The earth (bhur), the planets (bhuvah), and the galaxies (swah) are moving at a very great velocity, the sound produced is Om , (the name of formless God.) That God (tat), who manifests Himself in the form of light of suns (savitur) is worthy of bowing/respect (varenyam). We all, therefore, should meditate (dheemahi) upon the light (bhargo) of that deity (devasya) and also do chanting of Om. May He (yo) guide in right direction (prachodayat) our(nah) intellect dhiyo. So we notice that the important points hinted in the mantra are:



The total kinetic energy generated by the movement of galaxies acts as an umbrella and balances the total energy consumption of the cosmos. Hence it was named as the Pranavah (body of energy). This is equal to 1/2 mv2 (Mass of galaxies x velocity2). 2) Realizing the great importance of the syllable OM , the other later date religions adopted this word with a slight change in accent, viz., amen and Ameen.

Thursday, February 18, 2010

வாழ்க்கைப் பாதையில்....



எதைக் கண்டு ஒரு மனிதனுக்குச் சிரிப்பு வருகின்றது என்று கவனி.அவன் எப்படிப் பட்டவன் என்று மிக நன்றாகத் தெரிந்து கொண்டு விடலாம்.


ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல.விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பதே பெருமை.


பிறருடைய வார்த்தை உங்களது உற்சாகத்தை, உங்களுடைய முயற்சியை ஒரு நாளும் குறைத்து விட முடியாது. நீங்கள் அனுமதித்தாலொழிய!

Saturday, January 16, 2010

அரசனும் ஆண்டியும்


மன்னனுக்குச் சமனான செல்வம் கொண்டவரான திருவெண்காடர் அனைத்தையும் துறந்து கோவணத்தோடு கிளம்பி விட்டார்.மக்கள் அவரைப் பட்டிணத்தார் என்று போற்றினர்.

அதை அறிந்த மன்னன் வியந்தான்.

எல்லாச் செல்வங்களுடனும் நான் வந்திருக்கிறேன்.செல்வங்களைத் துறந்ததால் நீர் என்ன பெற்றீர்?

பட்டிணத்தார் அமைதியாகச் சொன்னார்.'நான் இருக்க நீர் நிற்க'

பொதுவாக மன்னரைப் பார்த்தவுடன் அனைவரும் எழுந்து வணங்குதல் தான் முறை.இங்கோ மன்னன் எதிரே வந்து நிற்கிறான்.பட்டிணத்தார் எழவில்லை; வணங்கவில்லை.

தேவைகளைக் கடந்தவன் அச்சத்தில் இருந்து விடுபடுகிறான்.அதனால் தான் நான் அமர்ந்திருக்கிறேன்.என் முன் நீ நின்று கொண்டிருக்கிறாய். என்றார் பட்டிணத்தார்.

***************************************

"நம்முடய செயல்களே பிற்காலத்தில் நமக்கான அடையாளங்கள்.தோற்றமல்ல"

-தென்றல்- ஜனவரி, 2010.(முதலாவது இதழ்)

Tuesday, January 12, 2010

நின்மதி


நல்ல மன சாட்சி ஒரு சிறந்த தலையணையாகும்.

வி.பி. சிங்.
(முன்னாள் பாரதப் பிரதமர்.)