
மக்களிடம் போ,
அவர்களுடன் வசி,
அவர்களிடம் கற்றுக் கொள்,
அவர்களை நேசி,
அவர்களுக்குப் பணி செய்,
அவர்களுடன் சேர்ந்து திட்டமிடு,
அவர்களுக்கு என்ன தெரியுமோ
அதிலிருந்து தொடங்கு,
அவர்களிடம் என்ன இருக்கிறதோ
அதை வைத்து எழுப்பு!
அண்மையில் வாசிக்கக் கிட்டிய ‘அறிவுக்கு ஆயிரம் வாசல்’ என்ற ரா.கி.ரங்கராஜன் அவர்களுடய புத்தகம் ஒன்றிலிருந்து;
மேலதிக குறிப்பு; அவ் வாசகம் பிலிப்பைன்ஸ் நாட்டு கிராமமொன்றின் சுவரொட்டியில் காணப்பட்ட வாசகம் என்ற குறிப்புக் அப்புத்தகத்தில் காணப் படுகிறது.
எல்லோருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
3 comments:
உண்மை மக்களை உளமார நேசித்தால் அதுவே அற்புதமான விளைவுகளைக் கொடுக்கும்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வரவுக்கும் பகிர்வுக்கும் நன்றி டொக்டர்.
ஏதாவது செய்தாக வேண்டும்.
எத்தனை இளம் குழந்தைகள் நம் தேசத்து வீதியில்? எத்தனை இளம் விதவைகள் நம் மண்ணில்? அங்கங்கள் இழந்த இளைஞர்கள் எத்தனை? நிர்க்கதியாய் நிற்க நிழழற்ற குடும்பங்கள் எத்தனை?
நாங்கள் சுகமும் வசதியும் சுபீட்சமும் உள்ள மாயை ஒன்றுக்குள் தொலைந்து போயிருக்கிறோமோ?
மிகுந்த குற்ற உணர்வாய் இருக்கிறது டொக்டர்.
சித்தன் நீங்கள் இணைந்து கொண்டது மிக்க மகிழ்ச்சியையும் பலத்தையும் தருகிறது எனக்கு.
நன்றி.
Post a Comment