Wednesday, April 14, 2010

மனசுக்கு உணவு



* தவறான அபிப்பிராயங்கள் பொய்யை விடப் பெரிய எதிரிகள்.

*பிறர் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று நினைக்கத் தொடங்கினால் அவர்கள் உங்களைப் பற்றி நினைக்காததை எல்லாம் நினைப்பதாக நீங்கள் நினைத்துக் கொள்வீர்கள்.

* மூடனுடன் விவாதம் செய்வது அறிவுடைமை அல்ல.அதனால் விவாதத்தின் பின் யார் மூடன் என்பது விளங்காமலே போய் விடும்.

* மற்றொருவனைப் பற்றி உன்னிடம் ஒருவன் வாயைத் திறந்தால் உன் செவியை அடைத்துக் கொள்.

* நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் நாம் வருந்த வேண்டியதில்லை.ஏனெனில், அது நமக்கு வேண்டாததாகக் கூட இருக்கலாம்.

* ஒருவரின் அவல நிலையைப் பார்த்துச் சிரிக்கும் போது நம் அறியாமையை உறுதிப் படுத்துகிறோம்.

* வீணான எண்ணங்கள் நச்சுக் கிருமிகள்.உள்ளே அனுமதித்து விட்டால் அழிப்பது சிரமம்.

* துயரங்களை எதிர் பார்ப்பவன் இரு முறை துயரம் அடைகிறான்.

நன்றி; பரிசு - சிறுவர் பத்திரிகை. ஏப்ரல் 2010

4 comments:

Anonymous said...

அருமையான கருத்துக்கள்...நல்ல தொகுப்பு...:)

யசோதா.பத்மநாதன் said...

புதுத்தோழியே வருக.

:-)

பிரதீப் said...

"மற்றொருவனைப் பற்றி உன்னிடம் ஒருவன் வாயைத் திறந்தால் உன் செவியை அடைத்துக் கொள்"

ithu romba kashtamaaga irukkirathu mekala!

யசோதா.பத்மநாதன் said...

:)

இன்று(26.6.10) காலை ஒரு 'Trauma & Healing'என்ற தலைப்பின் கீழான கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டேன்.அதில் எவ்வாறு நாம் பிரச்சினைகள் வரும் போது அவற்றை எதிர் கொள்கிறோம் என்பது பற்றிக் கேட்கப் பட்ட போது,ஒரு வயது முதிர்ந்த தம்பதியில் மனைவி சொன்னார். நான் எதுவென்றாலும் என் கணவரிடம் சொல்லிவிடுவேன். அதன் பிறகு எனக்கு மனம் ஆறுதலாயிருக்கும் என்று.அவர் காது கொடுத்துக் கேட்கிறார் என்பதே ஆறுதல் அவருக்கு!

கணவர் சொன்னார், நான் எல்லாத்துக்கும் ஓம் ஓம் என்பேன்.அது மற்றக் காதினால் போய்விடும்.என்னைத் தாண்டி அது வேறொரு இடத்துக்கும் போய்விடாது.

தேவை ஒரு புரிந்துணர்வு அவ்வளவு தான்!

எவ்வளவு அழகான ஜோடி!