Wednesday, June 2, 2010

மகா பாரதத்தில் ஒரு துளி


சுக்கிராச்சாரியார் அரச குரு. அவரது மகள் தேவயாணியும் அரசன் மகள் சர்மிஷ்டையும் வனத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட வாக்கு வாதம் ஒன்றில் இளவரசி தேவயாணியைப் பார்த்து 'நீ என் தந்தையிடம் கையேந்திப் பிழைக்கும் யாசகனுடைய மகள்' என்று கூறிவிட்டாள்.அது அரச குருவின் மகளுக்கு மிகுந்த ரோசத்தை கொடுத்து விட்டது.

அவள் வீடு செல்ல மனமின்றி மரத்தடியில் தங்கி விட்டாள். மகள் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்த சுக்கிராச்சாரியார் மகளின் நிலையறிந்து மிகத் துக்கப் பட்டு அவ்விடம் வந்து சேர்ந்தார்.அவளைப் பாசம் மீதுர அணைத்துக் கொண்டு,

"துக்கமும் சந்தோசமும் வெளி நிகழ்ச்சிகளில் இல்லை.நீ யார் பேரிலும் கோபிக்காதே.பிறருடைய குண தோசம் நமக்கு ஒரு தீங்கும் இழைக்க முடியாது" என்று சொன்னார்.

இவ்வாறு, மகாபாரதம் நிறைய வாழ்வின் சூட்சுமங்கள் புத்தகத்தின் பக்கங்கள் முழுக்கச் சிந்துண்டு கிடக்கின்றன.

மகாபாரதம்; ராஜாஜி;பக்;26;வானதி பதிப்பகம்.

2 comments:

Anonymous said...

அருமையான தேடுதல்.
தேடுதல் தொடரட்டும். தேடியது கிடைத்தே தீரும்.
வாழ்த்துக்கள்!

யசோதா.பத்மநாதன் said...

:)

உண்மை.

ராஜாஜி எழுதிய மகா பாரதம் ஒரு நல்ல பொக்கிஷம்.