
அறிவெனப் படுவது துன்பம் துடைத்தல்!
செறிவெனப்படுவது மும்மையும் செறிதல்!
ஆண்மை எனப் படுவது ஐம்புலன் வெல்லல்!
கேண்மை எனப் படுவது கெட்ட இடத்து உதவல்!
அருமை எனப்படுவது அறநெறி வழுவாமை!
பெருமை எனப்படுவது பிறன் இல் விளையாமை!
அறம் எனப் படுவது ஆருயிர் ஓம்பல்!
உறவெனப் படுவது உற்றுழி நிற்றல்!
வாய்மை எனப் படுவது வருந்தாது உரைத்தல்!
தூய்மை எனப் படுவது உள்ளத் தூய்மை!
-சீவ சம்போதனை என்ற ஜைன சமய நூலில் சிரோணிக மகாராசன் கூறும் அறிவுரை இது.-
ஆதாரம்; மு.அருணாசலம் எழுதிய ‘தமிழ் இலக்கிய வரலாறு - பதினாறாம் நூற்றாண்டு’
நன்றி; அறிவுக்கு ஆயிரம் வாசல்; ரா.கி.ரங்கராஜன்.
4 comments:
இப்படியான பதிவுகள் இன்னும் நிறைய தாருங்கள்..அருமையான விடயங்களை எளிமையாக சொல்லியிருக்கிறார்கள்..
ஒரு பொருளைத் திருத்தக் கொடுத்துவிட்டு நேரத்தைக் கடத்துவதற்காக அருகிலிருந்த “ஸ்பைஸ் லாண்ட்” என்ற கடையில் $2.50.க்கு வாங்கிய புத்தகம்.சுவாரிஸமான பல விடயங்கள் உண்டு அதில்.
புது வருடத்தில் நீங்களும் பல பதிவுகள் தர வாழ்த்துக்கள்!:)
அத்தனையும் இரத்தினங்கள்!
நன்று.
Post a Comment