
சாகப் போகிறவனுக்கு யார் நண்பன்?
தானம்.அது தான் மரணத்தின் பின் தனியாகச் செல்லும் உயிருடன் கூடப் போகும்.
எது சுகம்?
நல்லொழுக்கம்.
எதை இழந்தால் மனிதன் தனவான் ஆகிறான்?
ஆசை.
உலகத்தில் எது பெரிய ஆச்சரியம்?
நாள் தோறும் பிராணிகள் யமன் வீட்டுக்குப் போய்க் கொண்டே இருப்பதைப் பார்த்தும் மிஞ்சியுள்ள மனிதர்கள் தாம் நிலையாக இருப்பார்கள் என்று எண்ணுவதே பெரிய ஆச்சரியம்.
எது மனிதனைப் பாதுகாக்கிறது?
செய்த தர்மமே மனிதனைப் பாது காக்கிறது.
- பாரதத்தில் தர்ம தேவதை யக்ஷனாக வந்து தர்மரிடம் கேள்வி கேட்ட போது-
6 comments:
வணக்கங்க அம்மா! மணிமேகலை, மகனான மணிவாசகம் வீட்டுக்கு வருவது இயற்கைதானே?! நீங்கெல்லாம் அடிக்கடி வந்து போகணும்! உங்கள் ஆசிகள் என்றென்றும் எங்களுக்குத் தேவை தாயே!!
பணிவுடன்,
பழமைபேசி.
Simple and Superb.
அருமை.
வாழ்த்துகள்.
மிகவும் நன்றி மகனே!உன் வீட்டுக்கு வராமல் போக முடியுமா அப்பனே?அடிக்கடி வந்து தமிழமுது உண்டுதான் போகிறேன்.
இப்போது தான் பின்னூட்டம் கண்டேன்.மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
உங்களுடய வரவுக்கும் பின்னூட்டத்ய்ஜிற்கும் நன்றி வண்ணாத்திப் பூச்சியார்.
எது நிரந்தரம்?
இது பற்றி மிக பெரிய அளவில் இந்து மதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. நீங்கள் சொல்லியிருப்பது கடலில் ஒரு துளி மட்டுமே.
ஆன்மா நிரந்தரமானது. அதனால் செய்யப்படும் கர்மா நிரந்தரனானது. இப்படியே இது மிக பெரிய அளவுக்கு விரியும். விருப்பம் இருந்தால் தேடுங்கள்....
நன்றி
-- சின்னா.
நன்றி சின்னா. நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை.இது பற்றி ஹரே ராமா ஹரே கிருஷ்னா இயக்கத்தினர் மிக அழகாகத் தெளிவு படுத்தி இருக்கின்றனர்.எளிமையான விளக்கத்தோடு அமைந்திருக்கிறது அவர்களின் 'தன்னை அறியும் விஞ்ஞானம்'.பிரம்ம குமாரிகளும் அதனைச் சார்ந்த கருத்தையே கொண்டிருக்கின்றனர்.
மேலும்,உபநிடதங்கள், பகவத் கீதை போன்றன அவற்றின் மூலங்கள் என்பதனால் அவற்றிலும் அதனைத் தேடிக் கண்டு கொண்டிருக்கிறேன்.
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. உங்களால் முடிந்தால் நீங்கள் அறிந்து கொண்டவற்றையும் இங்கு பகிர்ந்து கொண்டால் எல்லோருக்கும் மிகவும் பயனுடயதாக இருக்கும்.
தொடர்ந்து வாருங்கள்.
Post a Comment