Friday, July 18, 2025

அப்துல்கலாம் மொழிகள்


 1. சென்றதை மறப்பது; நிகழ்காலத்தினை நேர்வழியில் செலுத்துவது; வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது; இந்த மூன்று செயல்களும் மகிழ்வான வாழ்வுக்குரியவை.

2 உன்.வாழ்க்கையில் முடிவுகளைப் பிறரிடம் விடாதே.முடிவு எப்போதும் உன்னுடயதாக இருக்கட்டும்.

3.எண்ணத்தில் கவனமாக இருங்கள். ஏனெனில் எண்ணங்கள் தான் சொற்கள் ஆகின்றன. சொல்லில் கவனமாக இருங்கள். ஏனெனில் சொற்கள் தான் செயல்களாகின்றன. செயலில் கவனமாக இருங்கள். ஏனெனில் செயல்கள் தான் பழக்கங்கள் ஆகின்றன. பழக்கத்தில் கவனமாக இருங்கள். ஏனெனில் பழக்கங்கள் தான் ஒழுக்கங்களாகின்றன. ஒழுக்கத்தில் கவனமாக இருங்கள். ஏனெனில் ஒழுக்கம் தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது.

4. உன் இதயம் மலராக இருந்தால் பேச்சில் அதன் வாசம் வரும்.

5. எங்கே விழுந்தாய் என்று பார்க்காதே; .எங்கே வழுக்கினாய் என்று பார்.

ஆதாரம்:

தோழர் செல்வா நினைவாக....( நினைவுமலர்) 31.10.2012.

Tuesday, February 11, 2025

சுவாமி சிவானந்தரின் அருளுரைகள்

 எத்தனை முறை பிரார்த்தனை செய்யப்பட்டது, எத்தனை தடவை மந்திரங்கள் ஜெபிக்கப்பட்டன, எத்தனை முறை விளக்குகள் ஏற்றப்பட்டு ஆராத்தி காண்பிக்கப்பட்டன, எத்தனை முறை மணி அடிக்கப்பட்டு மறை நூல்கள் வாசிக்கப் பட்டன போன்ற செயல்களைக் கொண்டு மனிதர்களைத் தெய்வீக அளவுகோல்கள் மதிப்பிடுவதில்லை.

அவரவர் உள்ளத்தில் எழும் எண்ணங்களின் தரத்தைப் பொறுத்தும்; அவர்கள் எத்தகைய வார்த்தைகளைத் தங்களுடய அண்டை அயலாரிடம் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தும்; அவர்கள் தங்களுடய வாழ்வை யார் யாருடன் கழிக்க வேண்டும் என்று இறைவன் வித்தித்திருக்கிறானோ அவர்களுடன் அவர்கள் ஈடுபடும் ஒவ்வொரு செயலைப் பொறுத்துமே தெய்வீக அளவுகோல்கள் மனிதர்களை மதிப்பிடுகின்றன.

நல்ல ஆரோக்கியமும் பொருளாதாரப் பாதுகாப்பும் மன அமைதிக்கு மிகவும் இன்றியமையாதவை. ஆனால் இவை இரண்டும் இருப்பினும் மக்களில் பலரும் தொடர்ந்தும் மன அமைதியின்றி அல்லற்படுகின்றனர். நம்முடய தொல்லைகள் பெரும்பாலும் நாமாகவே உண்டாக்கிக் கொண்டது என்பதால் அவைகள் பெரும்பாலும் தவிர்க்கப் படக் கூடியதே ஆகும்.

நாம் அடிக்கடி பிறர் விஷயங்களில் தலையிடுகின்றோம். மற்றவர்கள் செய்வது தவறானதாகவும் இருக்கலாம். ஆனால், அதன் பொருட்டு நாம் அல்லல் படவேண்டிய அவசியமில்லை. யாரையும் எதையும் குறைகூற வேண்டிய அவசியம் இல்லை. பிறருக்குத் தீர்ப்பளிக்கும் அதிகாரத்தைக் கடவுள் நமக்குக் கொடுக்கவில்லை. எல்லோரும் அவரவர் விருப்பப்படி தான்  நடக்கின்றனர். ஏனெனில் அவர்களுக்குள் இயங்கும் இறைவன் அவர்களை அப்படிச் செய்யத் தூண்டுகிறார். 

மன அமைதியைப் பாதுகாக்க வேண்டுமானால் நாம் நம்முடய சொந்த வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமானதாகும்.


நன்றி: வேதாந்திரியம்; ஆண்மீக மாத இதழ்

ஜூலை 2018 பக்:14.

( இந்தச் சமய சஞ்சிகைகளைப்  படிக்குமாறு கரிசனையோடு தாயகத்தில் இருந்து நண்பி மூலமாகக் கொடுத்தனுப்பி வைத்த சேவையர் அங்கிளுக்கும் நன்றி )

வாழ்க வையகம்!

வாழ்க வளமுடன்!!