வட்ஸப் இல் வந்த இந்த செய்தி அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் கடின சூழல்களுக்கு; சில சந்தர்ப்பங்களில் கடினமான குண இயல்புகளை கொண்ட மனிதர்களை எதிர் கொள்ளுகின்ற போது அவற்றை இலகுவாகக் கடந்து செல்ல வழிகாட்டுகிறதல்லவா?
சில வேளைகளில் யாரோ முகம் தெரியாத ஒருவர் சிந்திவிட்டுப் போகும் ஒரு புன்னகை போல, சில காலை வணக்கச் செய்திகளும் மனிதர்களை; சந்தர்ப்பங்களை; எதிர்பாரா சில நிகழ்வுகளை எதிர் கொள்ள திராணிகளை தந்து போகின்றன.
ஏதோ ஒரு விதமாக இங்கு வந்து சேரும் உங்களுக்கும் அது சில வேளைகளில் காயங்களுக்கு மருந்தாகலாம் அன்றேல் நோவுக்கு ஒத்தடம் ஆகலாம்.
நாளையும் சூரியன் உதிக்கும்!
No comments:
Post a Comment