பற்றுக்களோடு பற்றற்று இருத்தல் மற்றும் உலக வாழ்க்கையில் இருந்தபடி ஒட்டாமையுடன் வாழ்தல் பற்றிய ஒரு திருக்குறள் இது. வைபர் வழியாக என்னை வந்தடைந்தது.
‘யாதனின் யாதனின் நீங்கியான், நோதல்
அதனின் அதனின் இலன்’ - 341.
பொருள்: எந்தெந்தப் பொருள்களில் எல்லாம் மனமானது விலகி இருக்கிறதோ அந்தந்தப் பொருள்களினால் நமக்குத் துன்பம் கிட்டாது.
மனது ஒட்டாமல் காரியங்களை பற்றற்று ஆற்ற வேண்டும் என்று சொல்லும் இக்குறளில் இருக்கும் சிறப்பம்சம் என்னவென்றால் இக்குறளை உச்சரிக்கும் போதும் சரி, படித்து முடிக்கும் போதும் சரி, நம் இரு உதடுகளும் ஒட்டாது.
உதடு ஒட்டாமல் உச்சரித்து சொல்லி முடிக்கும் ஒரே குறளும் இது தான்.
வள்ளுவர் எவ்வளவு நுட்பமாக ஒவ்வொரு குறளையும் செதுக்கி இருக்கிறார்! இல்லையா?
4 comments:
சிறந்த பதிவு
பாராட்டுகள்
நன்றி.
தவறாமல் வருகை தருகின்றமைக்கும் பின்னூட்டம் தருகின்றமைக்கும்.
பற்றற்று வாழ்தல் சாத்தியமானால் இந்த பந்தங்களிலிருந்து விடுபட்டு வாழ்தலும் எத்தனை சாத்தியம்? மிக அழகானதோர் குறள் பகிர்வுக்கு மிக்க நன்றி தோழி.
வரவுக்கும் பகிர்வுக்கும் நன்றி கீதா.
பற்றற்று இருத்தலை தான் இந்து சமயம் ஞானம் என அழைக்கிறது என்று நம்புகிறேன்...
Post a Comment