Wednesday, August 8, 2018

பிரபஞ்சத்தோடு பேசுங்கள்



’If you change the way you look at things, the things you look at will change' - Wayne Dyer.

அதாவது, ’நீங்கள் ஒரு விடயத்தைப் பார்க்கும் கோணத்தை மாற்றிப் பாருங்கள். நீங்கள் பார்க்கும் பொருள் தானே மாறும்’ என்பது இதன் பொருளாகும்.

Quantum Physics முறைப்படி சின்னஞ் சிறு துகள்கள் ( Particles) அதனதன் தன்மையில் ஒன்றோடொன்று ஈர்க்கப் படும் முறையில் அணு( atom) உருவாகிறது என்கிறது. அது போலவே நம்முடய நல்ல எண்ணங்கள் நமக்கான நல்லனவற்றைக் கவர்ந்திழுக்கும். தீய எண்ணங்கள் தீய சூழலையே கவர்ந்திழுக்கும்.அதாவது உங்களுக்கு நடக்கும் நல்லவை தீயவற்றை உங்கள் எண்ணங்களே தீர்மானிக்கின்றன.

உங்களுக்கு என்ன தேவை? எப்படித் தேவை? என்பதை எல்லாம் உங்கள் எண்ணங்கள் தான் பிரபஞ்சத்திற்கு  ( universe) செய்திகளாக அனுப்புகிறது. அதையே இந்தப் பிரபஞ்சம் உங்களுக்குத் திருப்பித் தருகிறது என்கிறது ஆழ் மன இயல்.

எனவே உங்களைச் சுற்றிலும் ஏதாவது தவறாக நடந்தாலும் எதிர்மறைச் சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் நீங்கள் பார்க்கும் கோணத்தை நேர்மறையாக மாற்றிப் பாருங்கள். இப்படியாக உங்கள் மனதை மகிழ்ச்சியை மட்டுமே பார்க்கப் பழக்கினால் எந்தச் சூழலும் மகிழ்ச்சியானதாக மாறிவிடும்.

படித்ததில் கவர்ந்தது. (மங்கையை மலர்)

No comments: