விரும்பியதைச் செய்வது சுதந்திரம்
செய்வதை விரும்புவது சந்தோஷம்
‘வாழ்தல்’ என்பது அது தான்.
நூறுசதவீத ஈடுபாட்டுடன் செய்யும் எந்தக் காரியமும் வீணாவதில்லை.
....................................................
மின்சார பல்ப்பைக் கண்டு பிடித்த எடிசனில் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சி இது.
எடிசனின் ஆய்வு முடிவில் கண்டுபிடிப்பை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.விஞ்ஞானிகள் அறிஞர் குழாம் வந்து விட்டது. மேல் தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்துக்கு காட்டுவதற்காக தான் செய்து வைத்திருந்த மின்சார பல்ப்பை எடுத்து வருமாறு தன் உதவியாளரிடம் கேட்டுக் கொண்டார் எடிசன்.
உதவியாளர் அதனைக் கொண்டு வரும் போது தவறுதலாக அது விழுந்து உடைந்து போனது.எனினும்,பல தோல்விகளுக்கும் சோதனகளுக்கும் பழக்கப்பட்டு பண்பட்டிருந்த எடிசனின் செஞ்சம் அதற்காகத் தளரவில்லை. அவர் உடனடியாகவே மீண்டும் ஒரு பல்ப்பைச் செய்து அதே உதவியாளரையே எடுத்து வரச் செய்தார்.
ஏன் என்று கேட்டதற்கு எடிசனின் பதில் இது தான். “பல்ப் உடைந்தது; என்னால் அதனை மீண்டும் செய்ய முடிந்தது.ஆனால் அவனது மனம் காயப்பட்டு விட்டது. குற்ற உணர்வில் குறுகிப் போய் விட்டது. அவனை அதிலிருந்து விடுபட வைக்க இது தான் சிறந்த வழி. அவனால் இப்போது சிறப்பான அவதானத்தோடு அந்தச் செயலைச் செய்ய இயலும். எனக்கு அதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது”

5 comments:
உதவியாளரின் மனக் காயத்தை உணரும் தன்மையோடிருந்ததால் தான் அவரால் பலப்பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடிந்ததோ...! நல்லதொரு அனுபவம் தோழி. நல்லதொரு படிப்பினையும் கூட.
உண்மைதான் நிலா.
பண்பட்ட எண்ணமும் நடத்தையும் அடிக்கடி கை கோர்த்து வருவதில்லை - எடிசன் விலக்கு.

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா.
நாங்கள் எல்லாம் அடிப்படையில் மிருக ஜாதி தானே! எங்களுடய சிந்திக்கும் ஆற்றலால் எம்மை பண்படுத்திக் கொள்ள வேண்டும்.
அனுபவமும் சிலவற்றைக் கற்றுத்தரும் மற்றும் வயது, குடும்பப்பின்னணி, கல்வியறிவு, நண்பர்கள், சூழல்,...இப்படிச் சிலவும் செல்வாக்குச் செலுத்தும் போல.
தொடர்ந்து வாருங்கள் ஐயா.
Post a Comment