
மார்கழி மாதம் பத்தாம் திகதி நோபல் சமாதானப் பரிசு வழங்கப் படும் போது எல்லோருக்கும் அதன் ஸ்தாபகர் அல்பேட் நோபலின் பெயர் தான் ஞாபகம் வரும்.ஆனால் அவருக்குப் பின்னே ஒரு பெண்மணி இருந்தாள்.
பெர்த்தா. ஸ்டெட்னர் என்ற அந்தப் பெண் வெடி மருந்துத் தயாரிப்பாளரான நோபலின் கீழே வேலை பார்த்தாள்.பின்னர் ரஷ்யாவில் தன் கணவருடன் தங்கியிருந்த போது துருக்கிக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நடந்த போரின் கொடுமையைக் கண்ணால் கண்டார்.சமாதான இயக்கங்களில் ஈடு பட்டு நோபலையும் ஈடுபாடு கொள்ளச் செய்தார்.பெரும் ஆராய்ச்சிகள் செய்து ‘லே டவுன் யுவர் ஆர்ம்ஸ்’(உங்கள் ஆயுதங்களைக் கீழே போடுங்கள்)என்ற நாவலை எழுதினார்.போரின் கொடுமைகளை விபரித்த அந்த நாவல் நோபலை மிகவும் கவர்ந்தது.
இருபது ஆண்டுக் காலம் பெர்த்தாவோடு சகோதர நண்பரைப் போலp பழகிய நோபல் தான் இறக்கின்ற போது சமாதானத்துக்கான நோபல் பரிசை ஏற்படுத்தினார்.
(நன்றி; அறிவுக்கு ஆயிரம் வாசல்,ரா.கி.ரங்கராஜன்).
4 comments:
நல்லதொரு பகிர்வு..
Nice Information Post.
உங்கள் இருவரது வருகையாலும் மகிழ்கிறது ’உள்ளக் கமலம்’.
வருகைக்கும் பகிர்தலுக்கும் என் அன்பார்ந்த நன்றி.
பெர்த்தா பெண்ணினத்தின் பெருமை! ஒரு வெடிமருந்து தயாரிப்பாளரை அமைதிக்கான உயரிய விருதை உருவாக்கி வழங்க வைத்த அவரது தூண்டல் பழமரத்தின் வெளித்தெரியா வேர்!
Post a Comment