Tuesday, July 20, 2010
இப்படியும் பார்க்கலாம்
எங்கு யாரிடம் எந்தத் தவறைக் கண்டாலும் அதை உங்களிடம் திருத்திக் கொள்ளுங்கள்.
நாம் பேசுவதிலும் செய்வதிலும் பெரும்பாண்மையானவை அவசியமற்றவை.அவற்றை விலக்கி விட்டால் அதிக நேரமும் கூடுதலான மன அமைதியும் கிட்டும்.
மற்றவர்களுடைய தவறுகளைப் பற்றிய எண்ணங்களை நீ சுமந்து கொண்டு திரியாதே! அதை அவர்களிடமே விட்டு விடு.
மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள்,நினைக்கிறார்கள்,செய்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்துவதை நிறுத்தும் போது தான் பேரமைதி கிடைக்கிறது.நீ என்ன செய்கிறாய் என்பது மட்டுமே முக்கியம்.
செய்தவரைப் பார்க்காது அவரது செயலை மட்டுமே சீர் தூக்கிப் பார்.
புற விடயங்கள் பிரச்சினையல்ல.அவற்றைப் பற்றிய நமது மதிப்பீடுகளே பிரச்சினை.
அதிர்ப்திக்கெல்லாம் காரணம் சுயநலமே!
இது நல்லது;இது கெட்டது என்று அவசர தீர்ப்பு வழங்க மனதை அனுமதியாதே!
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
//நாம் பேசுவதிலும் செய்வதிலும் பெரும்பாண்மையானவை அவசியமற்றவை.அவற்றை விலக்கி விட்டால் அதிக நேரமும் கூடுதலான மன அமைதியும் கிட்டும்.//...சரியா சொல்லி இருக்கிங்க.
வரவுக்கு நன்றி ப்ரியா.எப்படி இங்கு வந்து சேர்ந்தீர்கள்?:)
அது மட்டுமில்லை.எல்லாவற்றிலும் அளவோடு இருந்து கொண்டாலும் நல்லது தான்.
அது எதுவென்றாலும்.மது, பணம்,புகை,பற்று,ஆத்மீகம்,நட்பு,
தேவைகள்,வேலை,போன்,கணணி,
இலக்கியம்,பாட்டு,பாசம்...
ஒரு பலன்ஸ் புள்ளியில் நின்றுவிடவேண்டும்.கொஞ்சம் கூடிவிட்டால் பிறகு அது நம்மை ஆட்சி செய்யத் தொடங்கி விடும்.
அந்தப் புள்ளி எது? அது தான் நாம் கண்டு பிடிக்க வேண்டிய இடம்.
திரும்ப திரும்ப படித்துக்கொண்டே இருக்கின்றேன்..ஏதாவது ஒன்றையாவது பின்பற்ற முயற்சிகின்றேன்...நன்றி
உங்களைப் போலத்தான் நானும் கண்ணன்.
மனம் கண்ணால் காண முடியாத ஒரு அதிசய அமைப்பு.நாம் மட்டுமே உணரக் கூடிய மனித உறுப்பு.அதை பிடித்துக் கட்டி வைக்கும் வல்லபம் கைகூடவேண்டும்.நாம் அதற்கு எஜமானன் ஆகவேண்டும்.அங்கு தான் இருக்கிறது சூட்சுமம் இல்லையா கண்ணன்? போராடுவோம்.
நன்றி வரவுக்கு.
மனசைக் கட்டிவைக்க உதவும் தங்கள் அனுபவ மொழிகள்.
அள்ள அள்ளக் குறையாது வழங்கும் அமுத சுரபியாய்
படிக்கப் படிக்க குறையாது, குறை, களையும் அருமருந்தாய்
உங்களின் ஒவ்வொரு பதிவும்.
இவை எல்லாம் நான் உண்டு களை தீர்த்த மன மருந்துகள் வாசன்.
மனதுக்கும் சில வேளை மருந்துகள் தேவை.
நான் பகிர்ந்து கொண்டவை எல்லாம் நம் முன்னோர் நமக்கு வைத்து விட்டுப் போன மருந்துகள்.
அவை எல்லோருக்குமானவை.
அன்போடு வந்து அபிப்பிராயத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி வாசனுக்கும் நிலா மகளுக்கும்.
நாம் எல்லோரும் பயணிகள்.ஓரிடத்தில் இணைந்து கொண்டிருக்கிறோம் போல:)
Post a Comment