Saturday, December 29, 2018

புத்தனின் அறிவுரை


மனதில் பட்டதைப் பேச முடியா விட்டால் மெளனமாக இரு.- புத்தர்-

Sunday, October 14, 2018

பூந்தோட்ட உள்ளம்


உள்ளம் பூந்தோட்டமாக இருந்தால் பேச்சில் அதன் வாசனை வரும்.
-எங்கோ படித்தது.

Wednesday, August 8, 2018

பிரபஞ்சத்தோடு பேசுங்கள்



’If you change the way you look at things, the things you look at will change' - Wayne Dyer.

அதாவது, ’நீங்கள் ஒரு விடயத்தைப் பார்க்கும் கோணத்தை மாற்றிப் பாருங்கள். நீங்கள் பார்க்கும் பொருள் தானே மாறும்’ என்பது இதன் பொருளாகும்.

Quantum Physics முறைப்படி சின்னஞ் சிறு துகள்கள் ( Particles) அதனதன் தன்மையில் ஒன்றோடொன்று ஈர்க்கப் படும் முறையில் அணு( atom) உருவாகிறது என்கிறது. அது போலவே நம்முடய நல்ல எண்ணங்கள் நமக்கான நல்லனவற்றைக் கவர்ந்திழுக்கும். தீய எண்ணங்கள் தீய சூழலையே கவர்ந்திழுக்கும்.அதாவது உங்களுக்கு நடக்கும் நல்லவை தீயவற்றை உங்கள் எண்ணங்களே தீர்மானிக்கின்றன.

உங்களுக்கு என்ன தேவை? எப்படித் தேவை? என்பதை எல்லாம் உங்கள் எண்ணங்கள் தான் பிரபஞ்சத்திற்கு  ( universe) செய்திகளாக அனுப்புகிறது. அதையே இந்தப் பிரபஞ்சம் உங்களுக்குத் திருப்பித் தருகிறது என்கிறது ஆழ் மன இயல்.

எனவே உங்களைச் சுற்றிலும் ஏதாவது தவறாக நடந்தாலும் எதிர்மறைச் சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் நீங்கள் பார்க்கும் கோணத்தை நேர்மறையாக மாற்றிப் பாருங்கள். இப்படியாக உங்கள் மனதை மகிழ்ச்சியை மட்டுமே பார்க்கப் பழக்கினால் எந்தச் சூழலும் மகிழ்ச்சியானதாக மாறிவிடும்.

படித்ததில் கவர்ந்தது. (மங்கையை மலர்)

Sunday, April 15, 2018

வாழ்க்கையின் அடிப்படைகள்


                                   

  




















                                   



                                   





                                   





                                   



















( நன்றி: அக்ஷ்யபாத்ரம்)

Monday, April 2, 2018

எது அழகு



எது அழகு?

சிவந்த நிறமா?வேல் போன்ற விழியா?  கூரான மூக்கா? வனப்பான உடல் அமைப்பா? வண்ண உடைகளா? வித விதமான சிகை அலங்காரங்களா? உயர் விலை நகை அலங்காரங்களா?

 இவை எல்லாம் அழகு தான். ஆனால் இவை மட்டும் அழகல்ல.

குழந்தைகளை அன்போடும் பண்போடும் அரவனைத்து வளர்க்கும் பெற்றோர் அழகு! அப் பெற்றோரை வயதான காலத்தில் பேணி வளர்க்கும் பிள்ளைகள் அழகு! மனைவியை மட்டம் தட்டாத கணவன் அழகு. கணவனை விட்டுக் கொடுக்காத மனைவி அழகு! பெண்களை கண்ணியமாக நடத்தும் ஆண்கள் அழகு! நிமிர்ந்த நன்நடை நேர்கொண்ட பார்வையுடன் கண்ணியம் காக்கும் பெண்கள் அழகு! செய்யும் தொழிலை மிகத் திறமையுடன் செய்பவர் அழகு!
தொழிலில் அறத்தையும் நேர்மையையும் இரு கண்களாகப் போற்றுபவர் அழகு! கையூட்டு வாங்க கைக்குச் சொந்தக்காரர் அழகு! பிறர் மனம் புண்படாமல் பேசும் அதரங்கள் அழகு! பிறரை ஊக்கப்படுத்தும் சொற்களுக்குச் சொந்தக்காரர் அழகு! பிறர் துன்பப்பட்டால் கலங்கும் கண்கள் அழகு!அத் துன்பத்தைக் களைத்திட நீளும் கைகள் அழகு! சமூக மேம்பாட்டுக்காக உழைக்கும் யாவரும் அழகு! பணிவாக இருக்கும் பண்பாளர்அழகு! மலர்ந்த முகமும் இனிய சொல்லும் கொண்ட மாந்தர் எப்போதும் அழகு!

இதன்படி வாழும் மனிதரா நீவீர்? உணர்ந்து கொள்ளும் நீவீர் தான் உண்மையில் அழகு!

( whatapp இல் வந்த செய்தி )

Monday, March 19, 2018

பேச்சும் வாசமும்



 உன் இதயம் மலராக இருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்.


Wednesday, January 31, 2018

வேலையும் மெளனமும்


சத்தமில்லாமல் வேலையைச் செய்து முடி. உன் வெற்றி சத்தம் போடட்டும்.


Tuesday, January 23, 2018

ஒரு புன்னகை


உன்னை அழிக்க நினைப்பவர்களை உன் புன்னகை பார்த்துக் கொள்ளும். அதனால் நீ புன்னகைக்க மறக்காதே.