Wednesday, August 31, 2016

நேரம்


உழைப்பவர்களுக்கு கண்ணீர் விட நேரம் இருக்காது.

Wednesday, August 17, 2016

இயற்கையின் ஆற்றல்


இயற்கை ஒரு போதும் வெற்றிடங்களை விடுவதில்லை.

Saturday, July 2, 2016

குண விஷேஷங்கள்




இந்தியா உலகிற்கு அளித்த செல்வம்;

‘அவன் உயிரை விட்டுவிட்டான்’ என்று மேலை நாட்டவரான நீங்கள் கூறுகிறீர்கள். நாங்களோ, ‘அவன் பூத உடலை விட்டு விட்டான்’ என்கிறோம்.

அது போல நீங்கள், உடலையே சிறந்ததெனக் கொண்டு, ’ஆண்மா உடலின் உடமை’ என்கிறீர்கள். நாங்கள், ’மனிதன் என்பவன் ஆண்மா, உடல் அதனது உடமை’ என்கிறோம்.

- ஞான தீபம் - சுடர் 6 ல் சுவாமி விவேகானந்தர்.-

”தகப்பன், தாய் இவர்களுடய குண விஷேஷங்கள் குழந்தைகளுக்குப் பிறவிச் சம்பத்தாகும்” - மகாபாரதம் -

Friday, April 8, 2016

உண்மையும் அழகும்


இம்ரான்கான் ஒரு முறை சொன்னார்,
’உடம்பின் கவர்ச்சியைக் காட்டுவது தான் அழகு என்று பல பெண்கள் நினைக்கிறார்கள்.அது மிகவும் தப்பு. அழகு என்பது மனதில் இருந்து வருகிறது. உடம்பில் இருந்து அல்ல.’- செய்தி -

Wednesday, March 23, 2016

சொல்லும் மெளனமும்




ஒரு கருத்தைச் சொல்ல ஒரு சொல் போதுமென்னும் போது இரு சொற்களைப் பயன்படுத்தாதே.

அந்தக் கருத்தால் எந்தப் பயனும் இல்லை எனும் போது அந்த ஒரு சொல்லையும் விரயம் செய்யாதே!

- சீன அறிஞர். சிங் செள -

Tuesday, February 9, 2016

எழுதல்....




எப்படி விழுந்தீர்கள் என்பது முக்கியமில்லை.
எவ்வாறு எழுந்தீர்கள் என்பதே முக்கியம்!
                                           - ஒரு நிகழ்ச்சியில் கேட்டது-

Wednesday, January 6, 2016

முடிவெடுக்க முன்னர்.....


”புத்தகத்தின் முகப்பு அட்டையைப் பார்த்து புத்தகப் பெறுமதியைத் தீர்மானிக்காதீர்கள்” - யாரோ -