Wednesday, May 6, 2015

அறிவின் கூறு




தேவை இல்லாத அறிவு இரட்டிப்பு மடமை.

11 comments:

sury siva said...

தேவை இல்லாத அறிவு இரட்டிப்பு மடமை.//



என்ன சொல்ல வருகிறீர்கள் என்று சரியாக புரியவில்லை.

ரவி வர்மா ஓவியம் ஒன்று இட்டு இருக்கிறீர்கள்.
அந்த அழகிய கேரள பெண்மணி கையில் ஒரு வீணையுடன் அமர்ந்து இருக்கிறாள்.


அழகாக இருந்தால் அறிவு அதுவும் இசை அறிவு தேவை இல்லை என நினைக்கிறீர்களோ !!

அதுவும் இரட்டிப்பு மடமை என்பதின் பொருள் என்ன?

தம்புரா ஒரு மடமை.
அதை வாசிப்பது இரட்டிப்பு மடமை யா ??

புரியவில்லை.

விளக்க வேண்டுகிறேன்.

சுப்பு தாத்தா.


www.subbuthatha72.blogspot.com
www.movieraghas.blogspot.com

நிலாமகள் said...

அறிந்தவை அனைத்தும் எதிலேனும் பயனாகும் என்றல்லவா எண்ணியிருந்தேன்...!

யசோதா.பத்மநாதன் said...

வணக்கம் தாத்தா. நீங்கள் வந்தது சந்தோஷம். கேட்டது அதை விட சந்தோஷம். (தயவு கூர்ந்து தவறெனில் என்னைச் சரிப்படுத்துங்கள்.)

அறிவும் புத்திக் கூர்மையும் நமக்கெதிரான கத்தியாக சில வேளைகளில் நீண்டு விடுகிறதை சில மாதங்களாக அனுபவிப்பதால் இக் கூற்றைக் கண்டவுடன் பதிந்து விட்டேன். காரணம் சொல்கிறேன்.

யசோதா.பத்மநாதன் said...

தாத்தா, என் நண்பர் ஒருவர். நற்குணங்களும் மென்மையான இயல்புகளும் பொருந்திய 4 பிள்ளைகளின் தந்தை. குடும்பஸ்தன். அண்மைக் காலமாக விவாக ரத்தான பெண் ஒருத்தி - ஏற்கனவே இன்னொரு குடும்பஸ்தனோடு ரகசியத் தொடர்புகளைப் பேணி வருபவள் - இந்த மனிதனையும் தன் வலைக்குள் சிக்க வைத்து விட்டாள்.

அவர்களின் ரகசிய லீலைகளை அடிக்கடி காணக் கிடைப்பது (தேவை இல்லாத அறிவு) காரணமாக ஒரு தடவை என் நண்பனிடம் ‘இது தவறு நண்பனே’ என்று கூறினேன்.முற்றிலும் குருடான நிலையில் அவன் இருப்பதோடு ‘I know what i'm doing' என்று என்னைத் தூர நிறுத்தி வைத்து விட்டான்.

மிக்க அவமானமாகப் போய் விட்டது தாத்தா.இந்த தேவை இல்லாத அறிவு இரட்டிப்பு மடமை தானே!

எனக்கு இன்னும் வலித்துக் கொண்டிருக்கிறது.ஒரு நட்பினை இழந்து போனது ஒரு புறம் இருக்க ஒரு ஏமாற்று / துரோகம் / பொய்கள் எல்லாம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

நான் பார்த்துக் கொண்டிருக்கச் சபிக்கப் பட்டிருக்கிறேன்.

நான் என்ன செய்யட்டும் தாத்தா.

யசோதா.பத்மநாதன் said...

நிலாத் தோழி,

சுப்புத் தாத்தாவுக்குச் சொன்ன நிகழ்வுக்கு உங்கள் அபிப்பிராயத்தையும் தரவேண்டும் என்று அன்போடும் உரிமையோடும் கேட்டுக் கொள்ளுகிறேன்.

நன்றி நிலா.

நிலாமகள் said...

இப்போது புரிகிறது தங்கள் இரத்தினச் சுருக்கப் பதிவின் பொருள்!

அடைமழையில் பாதுகாப்பாக காட்டிலொரு மரத்தில் தன் கூட்டிலிருந்த கிளி ஒன்று, மழையிலும் மரத்துக்கு மரம் தாவிக் கொண்டிருந்த குரங்கைப் பார்த்து அனுதாபத்துடன் புத்தி சொல்ல வெகுண்ட மடக்குரங்கு கிளிக் கூட்டை பிய்த்து எரிந்ததாம்.

தன்னறிவோ அன்றி சொல்லறிவோ இல்லாதவர்கள் அனுபவித்து திருந்தினால் தான் உண்டு.

நட்பு ரீதியில் எடுத்துச் சொன்னீர்கள். நட்புக்கும் தகுதியற்றவர் எனத் தெரிந்து கொண்டீர்கள். 'நரி இடம் போனால் என்ன வலம் போனால் என்ன' என்று ஒதுங்கிக் கொள்ள நமக்கொரு வாய்ப்பு என்று மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள் தோழி.

யசோதா.பத்மநாதன் said...

'நரி இடம் போனால் என்ன வலம் போனால் என்ன'

உண்மை தான் நிலா. புரிந்து கொண்டேன்.

ஆனாலும் ஒரு பெண் வஞ்சிக்கப் பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டும் வாளா இருப்பது கொடுமை நிலா.

தூர இருந்தும் அருகில் இருக்கும் நிலா! நன்றி,தேற்றிய வாஞ்சையுள்ள விரல்களுக்கும்.

நிலாமகள் said...

ஒரு பெண் வஞ்சிக்கப் பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டும் வாளா இருப்பது //

இந்த கோணமும் கனமானது தான். புத்தியும் அறிவுமிருந்தால் பிழைத்துப் போகட்டும் என பிரார்த்தித்துக் கொள்வோம்.

யசோதா.பத்மநாதன் said...

சரி தான்ம்மா.

போகட்டும்.

தனிமரம் said...

இரட்டிப்பு மடமையா சிந்திக்க வேண்டும் !!ஓவியம் அழகு!

யசோதா.பத்மநாதன் said...

:)
ரவிவர்மன் தூரிகையெல்லோ!