Wednesday, January 15, 2014

முடிவு எடுக்க முன்...



எந்த ஒரு விசயத்தையும் சில கோணங்களில் ஆராய்ச்சி செய்து முடிவு எடுத்தால்  அம்முடிவு தெளிவான முடிவாக இருக்கும்.

1.நான் இப்போது எடுத்துள்ள முடிவு உணர்ச்சி பூர்வமான முடிவா,அல்லது அறிவு பூர்வமான முடிவா?

2.இந்த நிலைப் பாட்டிலிருந்து நான் பின் வாங்குவது எனக்குப் பெருமையா, பின்னடைவா?

3.இந்த முடிவின் விளைவுகள் என்னவாக இருக்கும்?அவற்றை எதிர் கொள்ளும்  திறன் நமக்கு உண்டா?

4.இந்த முடிவின் மீது விமரிசனங்கள் எப்படி இருக்கும்?அவை புறக்கணிக்கத்
தக்கவையா,ஏற்கத் தக்கவையா?

5.எதிராளி இதற்கு எத்தகைய பதிலடி கொடுப்பான்?அவனை நாம் எடுக்கும் முடிவு, சாய்க்க வல்லதா,பணிய வைப்பதா,முன்னிலும் வீறு கொண்டு எழச் செய்வதா?

6.எதிராளி இதனால் துன்பப் படுவாரா? இதில் நம் மகிழ்ச்சி மட்டும் முக்கியமா?

7.இது பற்றி ஒரு சிலரிடம் கலந்து ஆலோசித்தால் என்ன?

8.முடிவுக்கு வர இன்னும் கால அவகாசம் இருக்கிறதா?ஆம் எனில்,அந்தக் கால அவகாசத்தை நாம் இன்னும் நன்றாக சிந்திக்கப் பயன் படுத்திக் கொண்டால் என்ன?

நன்றி: தென்றல்

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சரியான கருத்துக்கள்...

வாழ்த்துக்கள்...

நிலாமகள் said...

ஒன்றும் ஆறும் எட்டும் மிக அவசியமென நினைக்கிறேன்.

யசோதா.பத்மநாதன் said...

:) மிக்க நன்றி தனபாலர்

:) அப்படியா நிலா?