Saturday, December 28, 2013

கொஞ்சம் சரி பார்த்துக் கொள்ள...




உங்களுக்கு சிரிப்பதற்கும் பேசுவதற்கும் நேரமில்லை என்றால் நீங்கள் கட்டாயம் தவறாக வாழ்ந்து வருகிறீர்கள் என்று பொருள்.

நன்றி: தென்றல்

Friday, November 29, 2013

எல்லாம் நன்மைக்கே...



எல்லாம் நன்மைக்கே!
நம்புங்கள்
எல்லாம் நன்மைக்கே!!

அந்த நன்மையை நாம் கண்டுகொள்ள சில வேளை நாளாகலாம். அவ்வளவு தான்.

Friday, July 26, 2013

தூக்கத்துக்கு வழி.....



படுத்தவுடன் தூக்கம் வர என்ன வழி?

உங்களைப் பற்றி எந்த ஒரு உயிரினமும் கோபமாகவோ, தவறாகவோ,பொறாமையாகவோ, எரிச்சலாகவோ நினைக்க அந்த நேரத்தில் வழியே இல்லை என்றால் உங்களுக்கு நல்ல உறக்கம் சித்திக்கும்.

- திருவெண்ணாமலைச் சித்தர் -

Friday, June 28, 2013

எதிர்கொள்ள.......



”எதுவும் நேராதது போல நடந்து கொள்ளுங்கள்,
என்ன நேர்ந்திருந்தாலும் சரி”.


- நன்றி தென்றல் -

Friday, April 26, 2013

அநுபவ பாடம்

விரும்பியதைச் செய்வது சுதந்திரம்
செய்வதை விரும்புவது சந்தோஷம்
‘வாழ்தல்’ என்பது அது தான்.

நூறுசதவீத ஈடுபாட்டுடன் செய்யும் எந்தக் காரியமும் வீணாவதில்லை.
....................................................

மின்சார பல்ப்பைக் கண்டு பிடித்த எடிசனில் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சி இது.



எடிசனின் ஆய்வு முடிவில் கண்டுபிடிப்பை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.விஞ்ஞானிகள் அறிஞர் குழாம் வந்து விட்டது. மேல் தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்துக்கு காட்டுவதற்காக தான் செய்து வைத்திருந்த மின்சார பல்ப்பை எடுத்து வருமாறு தன் உதவியாளரிடம் கேட்டுக் கொண்டார் எடிசன்.

உதவியாளர் அதனைக் கொண்டு வரும் போது தவறுதலாக அது விழுந்து உடைந்து போனது.எனினும்,பல தோல்விகளுக்கும் சோதனகளுக்கும் பழக்கப்பட்டு பண்பட்டிருந்த எடிசனின் செஞ்சம் அதற்காகத் தளரவில்லை. அவர் உடனடியாகவே மீண்டும் ஒரு பல்ப்பைச் செய்து அதே உதவியாளரையே எடுத்து வரச் செய்தார்.

ஏன் என்று கேட்டதற்கு எடிசனின் பதில் இது தான். “பல்ப் உடைந்தது; என்னால் அதனை மீண்டும் செய்ய முடிந்தது.ஆனால் அவனது மனம் காயப்பட்டு விட்டது. குற்ற உணர்வில் குறுகிப் போய் விட்டது. அவனை அதிலிருந்து விடுபட வைக்க இது தான் சிறந்த வழி. அவனால் இப்போது சிறப்பான அவதானத்தோடு அந்தச் செயலைச் செய்ய இயலும். எனக்கு அதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது”

Wednesday, April 3, 2013

நமக்கான கேள்விகள்

1. என் தேவை என்ன என்பதை எப்படித் தீர்மானிக்கிறேன்? மற்றவர்களிடம் இருப்பதை வைத்தா? எனக்குத் தேவை என்ற அடிப்படையிலா?

2.என் அன்றாடத் தேவைகளுக்கு நான் யார் யாரைச் சார்ந்திருக்கிறேன்?

3 தினமும் என்னைச் சார்ந்து  (என் பணியை) நேரடியாகவும் மறைமுகமாகவும்   யார் யார் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியுமா?

4.ஊதியம் பெறாமல் அன்பினால் என் தேவைகளை அளித்து வருபவர்கள் யார் யார்?

5.ஊதியம் பெறாமல் அன்பின் காரணமாக நான் யார் யாருக்கு உதவியாக இருக்கிறேன்?

- கேள்விகள் நமக்கானவை. விடைகளும் நமக்குரியவை -

நன்றி: ஞாநி.ஆ.வி.12.9.07.

Saturday, March 2, 2013

அப்படியும் இப்படியும்



சரியான முடிவு என்பது அனுபவத்தால் பிறக்கிறது!
அனுபவம் என்பது தவறான முடிவுகளில் பிறக்கிறது.

நீ எடுத்த முடிவு சரியானதா என்று யோசிப்பதை விட
எடுத்த முடிவை சரியானதாக்க முயற்சி செய்.

முடியாது என்று நீங்கள் சொல்வதை எல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்து கொண்டே இருக்கிறான்.

நன்றி: பரிசு: மானவர் இதழ்: (தினக்குரல்) 24.2.13

Friday, January 11, 2013

விவேகம் என்பது......



ஒரு சாதகனுக்குத் தேவையான அடிப்படைக் குணாதிசயம் எது தேவையானது? எது தேவையற்றது? என்பதை அறிந்து கொள்வது தான்.

- மகாவீரர் -