Friday, July 27, 2012

தோல்வி என்றால் என்ன பொருள்?




தோல்வி என்றால் நீங்கள் தோற்றவர் என்று பொருள் அல்ல:நீங்கள் இன்னும் வெற்றி பெறவில்லை என்று பொருள்.

தோல்வி என்றால்,நீங்கள் எதையுமே சாதிக்கவில்லை என்று பொருள் அல்ல: சில பாடங்கள் கற்றுக்கொண்டு இருக்கிறீர்கள் என்று பொருள்.

தோல்வி என்றால் நீங்கள் அவமானப்பட்டு விட்டதாகப் பொருள் இல்லை:முயன்று பார்க்கும் துணிவு உங்களிடம் உள்ளது என்று பொருள்.

தோல்வி என்றால் உங்களிடம் சரக்கு இல்லை என்று பொருள் அல்ல:வேறு உத்திகளைக் கையாள வேண்டிய அவசியத்தை உணர்ந்து விட்டீர்கள் என்று பொருள்.

தோல்வி என்றால் வாழ்க்கை வீணாகி விட்டதாகப் பொருள் இல்லை:மீண்டும் ஆரம்பிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று பொருள்.

தோல்வி என்றால் விட்டு விட வேண்டும் என்று பொருள் அல்ல:இன்னும் செம்மையாக உழைக்க வேண்டும் என்று பொருள்.

தோல்வி என்றால் உங்களால் அடைய முடியாது என்று பொருள் அல்ல: அடையக் கொஞ்சம் தாமதமாகலாம் என்று பொருள்.

தோல்வி என்றால் கடவுள் உங்களைக் கை விட்டு விட்டார் என்று பொருள் இல்லை:உங்களுக்கு வேறு நல்ல எதிர் காலத்தை நிர்ணயம் செய்து வைத்திருக்கிறார் என்று பொருள்.


நன்றி: தென்றல்.

3 comments:

MARI The Great said...

அருமை சகோ!

நிலாமகள் said...

தோல்வியால் துவ‌ளாம‌லிருக்க‌ ப‌ற்றிக்கொள்ள‌ ந‌ற்றூண்க‌ள் இவை!

வெற்றி பெறுவதற்காக நமது நாணயத்தை இழப்பதும், குறுக்குவழிகளைத் தேர்ந்தெடுப்பதும் பயனுள்ளதல்ல. நாம் நமது நற்பண்புகளுக்கு விசுவாசமாக இருக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
நேர்மையில்லாத வழியில் வெற்றியடைவதை விட, கெளரவத்துடன் தோற்பதே சிறந்தது !
-மைக்கேல் டி மாண்டைன்

யசோதா.பத்மநாதன் said...

உடனடியாக வந்து பின்னூட்டம் தந்து போகின்ற போது அது தந்து போகின்ற மகிழ்ச்சியை என்னவென்று சொல்ல?

நன்றி வரலாற்றுச் சுவடுகள், அக்கறையோடு வந்து உங்கள் கருத்தைத் தந்து போனமைக்கும்

மகிழ்ச்சி நிலா! எப்போதும் ஒரு வித முழுமையைப் உங்கள் பின்னூட்டம் தரும். இன்றும் அது போலவே!