Monday, April 18, 2011

பார்வைகள்


ஆற்றில் விழுந்த அழகி


அழகி ஒருத்தி ஆற்றில் அடித்துச் செல்லப்படும் போது
''நமக்கென்ன''என்று பாராமல் இருப்பவன் மனித மிருகம்.
''ஆபத்து,ஆபத்து!''என்று அலறுபவன் பொது ஜனம்.
''ஐயோ பாவம்''என்று முணுமுணுப்பவன் அனுதாபி
''ஆண்டவனே, அவளைக் காப்பாற்று'' என்பவன் பக்தன்.
''அற்புதமான அழகு''என்று அந்த நிலையிலும் ரசிப்பவன் கவிஞன்.
''பெண்களும் நீச்சல் கற்க வேண்டும்''என்பவன் சீர்திருத்தவாதி.
''ஆற்றில் குளிக்கக்கூடப் பாதுகாப்பில்லை''என்பவன் எதிக்கட்சிக்காரன்.
''எவ்வளவு இழப்பீடு வழங்கலாம்''என யோசிப்பவன் ஆளும் கட்சிக்காரன்.
காப்பாற்றும் முயற்சியில் உயிர் துறப்பவன் தியாகி.
ஆற்றில் இறங்கி,காப்பாற்றி,தன வழியே செல்பவன் கர்மயோகி.

நன்றி; தென்றல்

7 comments:

Jana said...

அப்போ எவன் மனிதன்?

அந்த அழகியையும் காப்பாற்றி தன்னவள் ஆக்கிக்கொள்பவன்???
:)

யசோதா.பத்மநாதன் said...

:)
ஒரு முறை பா.ரா. அவர்களின் கவிதை ஒன்று பார்த்தது நினைவுக்கு வருகிறது.

முட்டக் குடித்து
தன்னிலை மறந்து தூங்க
1000காரணங்கள்
இருப்பதாகச் சொன்னவனிடம்
ஒரே ஒரு காரணம் மட்டும்
சொல்லும் படி கேட்டாள் அவள்.

அவனும் சொன்னான்.’இதெல்லாம் ஒரு காரணமா?’
என்றவளையும் சேர்த்து
இப்போது அவனிடம்
1001 காரணங்கள் இருந்தன.

:).

போளூர் தயாநிதி said...

பாராட்டுகள் நல்ல சிந்தனை . மனிதத்தை நேசிப்பவர்கள் மட்டுமே இப்படி மிகவும் தேவையான பதிவுகளை செய்வார்கள் தொடருங்கள் ....

போளூர் தயாநிதி said...

உங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் , தமிழ் ,மற்றும் தமிழ் கலையான சித்தமருத்துவத்தின் பால் உங்களுக்கு உள்ள அளவுகடந்த ஈடு பாட்டிற்கும் பாராட்டுகளும் நன்றிகளும் . உங்களின் வருகை சிறப்பானதாக இருக்கட்டும் நீங்கள் பதார்த்த குண புத்தகம் தரவிறக்கம் செய்ததாக கூறி உள்ளீர்கள் .அதை எந்த தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்தீர்கள் முகவரிதருக நன்றிகளுடன் .
siddhadhaya @g mail .com

யசோதா.பத்மநாதன் said...

நன்றி தயா.பதில் தனியாக வருகிறது.

www.eraaedwin.com said...

ஆஹா

யசோதா.பத்மநாதன் said...

:).