Monday, February 21, 2011

மனதின் படிக்கட்டுக்கள்



’மனித தேவைகளே அவனின் நடத்தையைத் தீர்மானிக்கின்றன’ என்கிறார் maslow என்ற மேலைத் தேய உளவியலாளர்.முதலில் வருவன அவனின் அடிப்படைத் தேவைகள். அது பூர்த்தியாகும் பட்சத்தில் அவனது தேவைகள் அடுத்த கட்டமான பாதுகாப்பு, நின்மதி போன்றவற்றை நாடுகின்றது.அதற்கடுத்ததாக அன்பு,உறவு,குடும்பம்,நட்பு போன்றவற்றை மனம் இயல்பாக நாடுகின்றது.

இவ்வாறே ஒவ்வொன்றும் பூர்த்தியாகுமிடத்து அடுத்த கட்டத்தை நோக்கி மனம் நகர்கிறது.இறுதியில் அது உயர்வான மனநிறைவில் வாழ்வைப் பூரணப் படுத்துகிறது.அது நிறைவேறும் வரை மனம் ஓடிக் கொண்டே இருக்கும்.போராட்டமும் தொடர்ந்த வண்ணமாகவே இருக்கும் என்கிறது உளவியல்.

ஒரு மனிதன் எந்தப் படிநிலையில் இருக்கிறானோ அந்தத் தேவைகளை மையமாக வைத்து அவனது வேட்கைகள்,
விருப்புவெறுப்புகள்,தொடர்புகள்,நடைமுறைகள்,சிந்தனைகள்,கருத்துலகம்,பார்வை,நோக்கம்,திருப்தி முதலியன அமைகின்றன.

நீங்கள் எந்தக் கட்டத்தில் இப்போது நிற்கிறீர்கள்?



\-------------------------------7.உயர் திறன்,மனநிறைவு,
\-----------------------------6.ரசனை,கலையாக்கம்,அழகுணர்ச்சி
\--------------------------5.அறிவாற்றல்,தெளிதல்,ஞானம்
\------------------------4.மானம்,கெளரவம்,மதிப்பு
\----------------------3.அன்பு,உறவு,
\------------------- 2.பாதுகாப்பு,நின்மதி
\-----------------1.உடலியற் தேவைகள்,உணவு,உடை,வீடு,



மேலே உள்ளவை நம்முடைய படிநிலைத் தேவைகள்.



நம்மைச் சுற்றி உள்ள விரிவடையும் வட்டங்கள் கீழே உள்ளவை.


1.அகங்காரம்.
|
2.குடும்பம்.
|
3.கூட்டுக் குடும்பம்.
|
4.சாதி,குலம்.
|
5.பிரதேசம்.
|
6.இனம்,கலாசாரம்.
|
7.தேசம்.
|
8.மதம்.
|
9.மானுடம்.
|
10.பரமாத்மா.


நன்றி;பேராசிரியர். தயா.சோமசுந்தரம்.’தன்னாத்மாவைத் தேடி அலையும் மனிதன்’,தலைவர்,உளமருத்துவத்துறை,யாழ்.பல்கலைக்கழகம்.1994.

7 comments:

Jana said...

அருமை. பகிர்வுக்கு நன்றி. தயா சோமசுந்தரம் நாம் பயன்படுத்த தவறிய நபர்களில் முக்கியமானவர் என்பது என் கருத்து.

யசோதா.பத்மநாதன் said...

உண்மை! சரியாகச் சொன்னீர்கள்.

1994ம் ஆண்டு அவர் அந்த நினைவுப் பேருரையை ஆற்றும் போது நான் அங்கு சமூகமளித்திருந்தேன்.

அப்போதே அவர் பேச்சின் தாற்பரியம் மிக ஆச்சரியத்தை அளித்தது.ஆண்மீகத்தை விஞ்ஞானத்தால் ஆராய்ந்து இரண்டுக்கும் இடையே ஓர் இணைப்பை ஏற்படுத்தி முடிவுகளை முன்வைத்த ஓர் தனித்து நிற்கும் பேராற்றல் அவர்.

தன்னை,தன் ஆத்மாவைக் கண்டெடுத்து, கண்டெடுத்த மார்க்கத்தையும் அதில் விஞ்ஞான ரீதியாக விளக்குகிறார்.

அந்த உயர்வு பற்றிச் சிந்திக்க மனிதனுக்கு எங்கே நேரம்?

எதிர்பாராவிதமாக அதன் எழுத்து வடிவத்தை கடந்த வாரம் வலைத் தளம் ஒன்றில் கண்டெடுத்தேன்.

பிரிந்திருந்த குழந்தை ஒன்றை மீளக் கண்டெடுத்த மகிழ்ச்சி அதில் எனக்கு.

வரவுக்கும் பகிர்வுக்கும் நன்றி ஜனா.

அன்புடன் நான் said...

மனம் ..
மிக தெளிவா சொல்லியிருகிங்க... பாராட்டுக்கள்,

யசோதா.பத்மநாதன் said...

நன்றி கருணா.

தயா.சோமசுந்தரம் அவர்கள் அதனைச் சிறப்பாக விளங்கப் படுத்தி இருக்கிறார்.

’தன் ஆத்மாவைத் தேடி அலையும் மனிதன்’என்ற தலைப்பில் அதனை ஆவணப் படுத்தி இருக்கிறது நூலகம்.நெற்.நேரமிருந்தால் அதில் பதிவிறக்கிப் பார்க்கலாம்.இன்னும் கூடுதலான விளக்கங்கள் கிடைக்கலாம்.

உங்கள் வரவுக்கு நன்றி கருணா. தொடர்ந்து வாருங்கள்.

www.eraaedwin.com said...

அன்பின் தோழர் யசோதா,
வணக்கம். நலமா? எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். "பத்துக் கிலோ ஞானம்" எப்படி அனுப்புவது? உங்களது முகவரியினையும் மின்னஞ்சலினையும் அனுப்புங்கள். உங்களது வலையினை எனது வலையின் முகப்பில் வைத்து விட்டேன். இனி தொடர்ந்து பார்ப்பேன். அனைத்தையும் படித்துவிட்டு பேசுகிறேன்.

www.eraaedwin.blogspot.com

eraaedwin@gmail.com

www.eraaedwin.com said...

அன்பின் தோழர் யசோதா,
வணக்கம். நலமா? எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். "பத்துக் கிலோ ஞானம்" எப்படி அனுப்புவது? உங்களது முகவரியினையும் மின்னஞ்சலினையும் அனுப்புங்கள். உங்களது வலையினை எனது வலையின் முகப்பில் வைத்து விட்டேன். இனி தொடர்ந்து பார்ப்பேன். அனைத்தையும் படித்துவிட்டு பேசுகிறேன்.
www.eraaedwin.blogspot.com

eraaedwin@gmail.com

யசோதா.பத்மநாதன் said...

அன்புள்ள எட்வின்,

மிக்க மகிழ்ச்சி.உங்களைக் கண்டு கொண்டதில் இன்னும் மகிழ்ச்சி.பதில் தனியாக வருகிறது.