Sunday, November 7, 2010

கவனம்!


சிறிய பாம்பென்றாலும் பெரிய தடியால் அடி!

7 comments:

நிலாமகள் said...

மிகச் சரி! அஞ்சுவது அஞ்சாமை பேதமையல்லவா...

யசோதா.பத்மநாதன் said...

சரியாகச் சொன்னீர்கள் தோழி!

நிலாமகள் said...

படத்தில் பாம்பிடம் மாட்டிக் கொண்ட குருவியின் கண்ணில் தெரியும் அதீத பயமும், அபயக் குரலெழுப்பும் திறந்த அலகும் ஒரே அடியில் அப்பாம்பை கொன்று போடும் ஆவேசம் கிளப்புகிறது தோழி.

யசோதா.பத்மநாதன் said...

ஓம்! எனக்கும் தான்.

’தர்ம ஆவேசம்’,’தார்மீகக் கடன்’ அது இல்லையா? நியாயம் நிலை பெற வேண்டும்.

உங்கள் அறிமுகம் மகிழ்ச்சியாக இருக்கிறது தோழி.

அடிக்கடி வாங்கோ.

நிலாமகள் said...

புலரும் பொழுதெல்லாம் உன்னத நட்பு பூக்களை மலர்விக்கிற இறையருள் நிலைக்கட்டும்! இன்று அடிக்கடிதான் வருகிறேனோ ...! ஒரு சின்ன திருத்ததுக்காக இப்போதைய வருகை. எனது வலைப்பூவில் புன்னகைத்திருப்பது பாண்டிச்சேரி அரவிந்தர் அன்னை! தியானத்தில் சற்று ஈடுபாடுள்ள நான், பாண்டிச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமத்துக்குள் காலெடுத்து வைத்த தருணம் உணர்ந்த சிலிர்ப்பின்பால் ஈர்க்கப்பட்டதன் விளைவு. சில கோவில் விக்ரகங்களை தரிசிக்கும் போதும் இந்த சிலிர்ப்பை உணர்ந்து உள்வாங்கியிருக்கிறேன்.

யசோதா.பத்மநாதன் said...

உங்கள் அன்பான வருகைக்கும் எனக்கு அறியப் படுத்தியமைக்கும் மிகுந்த நன்றிகள் தோழி.

உங்கள் நட்பு கிட்டியதில் மிக மகிழ்கிறேன்.

உங்கள் வலைப்பூவின் வசீகரிக்கும் வாசத்தில் ஈர்க்கப் பட்டவர்களில் நானும் ஒருத்தி.

ஹரே ராமா ஹரே கிருஷ்னா அமைப்பினரின் ‘தன்னை அறியும் விஞ்ஞானம்’ என்ற புத்தகம் கிடைத்தல் வாசித்துப் பாருங்கள் நிலா.

என்னைப் புரட்டிப் போட்டது அந்தப் புத்தகம்.உங்களுக்கும் அது பிடிக்கக் கூடும்.

உங்கள் அனுபவங்களையும் எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.அறிய ஆவலாயிருக்கிறேன்.

உங்கள் அணில் பற்றிய பதிவில் உங்களை இனம் கண்டு கொண்டிருக்கிறேன்.

இனம் எது வென்று புரியாத மகிழ்ச்சியில் திளைக்கிறேன்.

நிலாமகள் said...

வணக்கம் தோழி...
மேற்கண்ட தங்கள் கருத்துரை கண்டேன். நேரமின்மையால் புது பதிவில் குறித்துக் கொள்ளலாமென சென்று விட்டேன். கவலை வேண்டாம். எனக்கும் தொழில் நுட்ப வேலைகளைச் செய்து தருவது என் பிள்ளைகள் தான்.