Thursday, September 30, 2010

ஒளிமேவும் அழகு!


"ஆசைகள் இல்லாத சித்தம்
அதிலொன்றும் காயங்கள் நேராது
மாசேதும் இல்லாத புத்தி
மற்றோரைக் காயப் படுத்தாது
நேசத்திலே நெய்த நெஞ்சம்
நீதிக்கு மேலேதும் அறியாது
ஓசைகள் தீர்ந்திடும் மாலையில்
ஒளி மேவும் அழகுக்கு நிகரேது?"


'ஓசைகள் தீர்ந்திடும் மாலையில் ஒளிமேவும் அழகு' எனக் கவிஞர் குறிப்பிடுவது உலகத்தின் சலசலப்புகள் எல்லாம் அடங்கி முகமூடிகளைக் களட்டி வைத்து விட்டு நம்மை நாம் தரிசிக்கின்ற வேளையில் கண்முளித்துக் கேள்வி கேட்கத் தொடங்கும் மனசாட்சியின் மகிழ்ச்சியும் திருப்தியும் கொண்ட,பொலிவும் நின்மதியும் கொண்ட நிறைவு முகம் என்றே நான் அதனை மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறேன்.

உன்னதமான மகிழ்ச்சியின் மூல ஊற்று அங்கு தான் நிலை கொண்டிருக்கின்றது என்பது என் எண்ணம்.'உள் அழகு.'

உங்களுக்கு வேறேதும் தோன்றுகின்றதா?

இந்த அழகிய கவிதா வண்ணத்தை கவிஞர் ரமணன் என்பவர் இயற்றி இருக்கின்றார். 'எந்த வானமும் உயரமில்லை' என்ற கவிதைத் தொகுப்பில் இது வெளியாகியிருகின்றது என்ற குறிப்புடன் அதனைத் தந்திருக்கின்றது நிலாச்சாரல் என்ற மின் இதழ்.

நன்றி; நிலாச்சாரல்.

2 comments:

பழமைபேசி said...

நிறைய எழுதி இருக்கீங்க போல. வார ஈறில் அனைத்து இடுகைகளையும் வாசித்து மகிழ்கிறேன்.

நன்றி,
மணி.

யசோதா.பத்மநாதன் said...

மகிழ்ச்சிப்பா.
:)