Tuesday, July 20, 2010

இப்படியும் பார்க்கலாம்


எங்கு யாரிடம் எந்தத் தவறைக் கண்டாலும் அதை உங்களிடம் திருத்திக் கொள்ளுங்கள்.

நாம் பேசுவதிலும் செய்வதிலும் பெரும்பாண்மையானவை அவசியமற்றவை.அவற்றை விலக்கி விட்டால் அதிக நேரமும் கூடுதலான மன அமைதியும் கிட்டும்.

மற்றவர்களுடைய தவறுகளைப் பற்றிய எண்ணங்களை நீ சுமந்து கொண்டு திரியாதே! அதை அவர்களிடமே விட்டு விடு.

மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள்,நினைக்கிறார்கள்,செய்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்துவதை நிறுத்தும் போது தான் பேரமைதி கிடைக்கிறது.நீ என்ன செய்கிறாய் என்பது மட்டுமே முக்கியம்.

செய்தவரைப் பார்க்காது அவரது செயலை மட்டுமே சீர் தூக்கிப் பார்.

புற விடயங்கள் பிரச்சினையல்ல.அவற்றைப் பற்றிய நமது மதிப்பீடுகளே பிரச்சினை.

அதிர்ப்திக்கெல்லாம் காரணம் சுயநலமே!

இது நல்லது;இது கெட்டது என்று அவசர தீர்ப்பு வழங்க மனதை அனுமதியாதே!

Saturday, July 17, 2010

சில துளிகள்



*வெற்றி தலைக்கும் தோல்வி இதயத்திற்கும் செல்லாது பார்த்துக் கொள்ளுங்கள்.

*மனிதன் பிறந்தது வெற்றியடையவே; தோல்விக்கான காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்கவல்ல.

*துரதிஷ்டத்தின் போது துணிவுடன் இருங்கள்.நல்லதிஷ்டத்தின் போது பணிவுடன் இருங்கள்.

*ஒருவன் உயரும் போது உலகம் அவனைப் பார்க்கிறது.வீழ்ச்சியடையும் போது தான் அவன் உலகத்தைப் பார்க்கிறான்.

*நான் சோம்பேறி என்பதைத் தான் சிலர் நாசுக்காக எனக்கு நேரமே கிடைக்கவில்லை என்கிறார்கள்.

*ஒன்றைச் செய்ய விரும்பினால் வழியைக் கண்டுபிடிக்கிறாய்.செய்யாமல் இருக்க விரும்பினால் காரணங்களைக் கண்டுபிடிக்கிறாய்.

*திறமை ஒருவனை மேலே கொண்டு போகும்.நல்ல குணம் தான் அவனைக் கீழே விழாமல் பாதுகாக்கும்.

நன்றி;பரிசு சிறுவர் பத்திரிகை;மே 09 - 23,2010 மற்றும் ஜூன் 13 - 27,2010